திருநீறின் மஹிமையைக் கூறும் சம்பவம் மதுரையில் நடைபெற்றது. மதுரையை ஆண்டுகொண்டிருந்த நெடுமாற பாண்டியனுக்கு சமணமதத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டதால், அவன் சமணத்தை தழுவியிருந்தான். சைவர்களான அவன் மனைவி மங்கையர்கரசிக்கும் அமைச்சர் குலச்சிறையார் இதில் பெரும் வருத்தம். சமண்த்துறவிகள் மதபேதத்தாலும் மதியிழந்து, மன்னனின் சம்மதத்துடன், திருஞானசம்பந்தருக்கு தீ
வைத்துவிடுகின்றனர். 'அவன் இட்ட தீ அவனையே சென்று மெல்லத் தாக்கட்டும்' என்று ஞானசம்பந்தர் தீயின் தாக்கத்தை பாண்டியனுக்கே திருப்பிவிடுகிறார்.
"செய்யனே திருவாலவாய் மேவிய
ஐய்யனே அஞ்சலென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பையவே சென்று பாண்டியர்காகவே"
மன்னனின் மனைவியும் அமைச்சரும், மிகுந்த சிவபக்தர்கள் என்பதால், இரங்கி, தீயை மெல்லத் தாக்கப் பணித்தாராம் சம்பந்தர். தீயின் வெப்பம் மெல்ல உடலில் பரவ, அதன் தாக்க்த்தை தாளாது மன்னன் துடிக்க, சமணர்கள் செய்த எவ்வித மந்திரங்களும் சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை. மங்கையர்க்கரசி, குலசேகர பாண்டியன் அழைப்பின் பேரில் சம்பந்தர் ஆஜராகி, மன்னனை குணப்படுத்துகிறார். மந்திரம் ஜபித்து திருநீறு பூசி குணமடையச் செய்கிறார்.
"
மந்திரமாவதும் நீறு வானவர் மேலதும் நீறு
சுந்தரமாவதும் நீறு துதிக்கப்படுவதும் நீறு
தந்திரமாவதும் நீறு சமயத்தில் உள்ளதும் நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநீறே."
என்ற திருநீற்றுப்பதிகத்தை பாடுகிறார்.
சமணர்களுக்கு சைவத்தின் மீதும் சம்பந்தர் மீதும் விரோதம் இருந்தபடியால், அவர் குணமானதை மந்திர தந்திர விஷயம் என்று ஒதுக்கி விட்டு, தங்களோடு வாதமிட அழைப்பு விடுக்கின்றனர். அனல்வாதம் புனல்வாதம் என்ற இருவாத முறைகளிலும் முறையே மந்திரம் ஓதப்பட்ட ஏடுகளை தீயிலும் நீரிலும் இட்டாலும், எந்த ஏடு எரியாமல், மூழ்காமல் நிற்கிறதோ அவர்கள் வென்றதாக கருதப்படவேண்டும், என்பது நிபந்தனை. சம்பந்தர் அனைத்திலும் வெற்றி பெற்றுவிடுகிறார். சமணர்கள் சிலர் மதம் மாறுகின்றனர். வேறுசிலர் கழுவில் ஏறி உயிர்த் துறக்கின்றனர் என்று சரித்தரம் அழுத்தமாக நடந்தவற்றை எடுத்துரைக்கிறது. அத்தகைய மகிமை வாய்ந்ததாம் திருநீறு. பக்தியுடன் அணிவோருக்கு நல்லருள் கிட்டும் என்பது திண்ணம்.
சிவபெருமானை தியானித்து தண்ணீருடன் சேர்த்துக் குழைத்து மூன்று கோடுகளாக விபூதியை இட்டுக் கொள்ளல் வேண்டும். இதற்கு திரிபுண்டரம் என்று பெயர். மூன்று வகைப்பாவங்களைப் போக்கும் விபூதியின் மூன்று கோடுகள் மகத்தானவை.
முதல் கோடு: அகாரம், கார்ஹபத்யம், ரிக்வேதம், பூலோகம், ரஜோகுணம், ஆத்மா, க்ரியாசக்தி, அதிகாலை மந்திரத்தின் தேவதை மஹாதேவன் ஆகியவை அடங்கியது.
இரண்டாவது கோடு: உகாரம், தட்சிணஅக்னி, ஆகாயம், யஜுர்வேதம், சத்வகுணம், பகல்நேர மந்திரதேவதை இச்சாசக்தி, அந்தராத்மா, மகேஸ்வரன் ஆகியோர் இதில் உள்ளனர்.
மூன்றாவது கோடு: : மகாரம், ஆலஹனீயம், பரமாத்மா, தமோகுணம், சுவர்க்கம், ஞானசக்தி, ஸாமவேதம், மாலைநேர மந்திர தேவதை, சிவன் ஆகியோர் இதில் உள்ளனர்.
சிவபெருமானை எண்ணி விபூதியை அணிவதே மாஹேஸ்வர விரதம் எனப்படும். இந்த விரதம் எல்லா பாபங்களையும் நீராக்கும்; மோட்சம் தரும்; பயம் போக்கும்.