நல்ல வாழ்க்கை

நல்ல வாழ்க்கை என்பது கடைபிடிக்க வேண்டியவைகளை கடைபிடித்து, விட்டுவிட வேண்டியவைகளை விட்டுவிட்டு அர்த்தமுடன் வாழும் வாழ்வாகும். வாழ்க்கை என்ற ஒரு சொல் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தையாகும். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பமாக வாழும் வாழ்க்கை, தொழில் முறையிலுள்ள வாழ்க்கை, சமூகத்தில் ஒருவனாயுள்ள வாழ்க்கை இப்படி பல அம்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அனைத்து வாழ்விலும் அர்த்தம் இருக்க வேண்டும், பொருள் நிறைந்திருக்க வேண்டும் அதுவே நல்ல வாழ்க்கையாகும்

ஒவ்வொரு வாழ்க்கை அம்சங்களையும் முழுமையாக வாழ வேண்டும், மனதின் எல்லா வெற்றிடங்களையும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து நிரப்பிக்கொள்ள வேண்டும். வீடு, குடும்பம் என்று சில வாழ்வுகள் எல்லாருக்குமே அமைந்து விடும், ஆனால் சமுதாயத்தில் அர்த்தத்துடன் வாழும் முறையை எல்லோரும் கடைபிடிப்பதில்லை, தொண்டு செய்கிற குணம், சேவை செய்கிற மனப்பான்மை எல்லோருக்கும் வருவதில்லை வாழ்விலுள்ள பல அர்த்தங்கள் சமூகத்திற்கு செய்கின்ற சேவைகளிலும், தொண்டுகளிலும் தான் ஒளிந்துள்ளது.

சேவை செய்வதுதான் மனித நேயத்தின் திறவுகோல், தூய மனதின் அடையாளம், குணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி, எளியவர்களுக்கு சேவை செய்பவர்கள் கடவுளை தரிசிக்க வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை, கண்ணை மூடி கடவுளை தேட வேண்டியதில்லை கண்ணை திறந்தே கடவுளை பார்க்க முடியும். வாடிய இதயங்களுக்கு செய்கின்ற சேவை இறைவனுக்கு செய்கின்ற சேவையாகும்.'பிரார்த்தனை செய்யுங்கள், கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். சேவை செய்து பாருங்கள், கடவுளே உங்கள் அருகில் வருவார்' என்றார், சமூகப் பணியால் நோபல் பரிசு பெற்ற அன்னைதெரசா.

கடவுளை அடைய வேண்டுமானால் துறவறம் பூண்டு, காவிகட்டி மலைகளுக்கு செல்ல வேண்டியதில்லை சேவை மனப்பான்மை இருந்தாலே போதும் கடவுளை நெருங்கலாம், மனமுருகி சேவை செய்பவன் அரசியல்வாதியாக இருந்தாலும் , நடிகனாக இருந்தாலும் அவர்கள் கடவுளை நெருங்கிக்கொண்டே இருப்பார்கள், எனவே வாழ்க்கை அம்சங்கள் அனைத்திலும் நம்மை அதிகமாக மேம்படுத்திக் கொள்ள வேண்டியது சமுதாய பணிகளில்தான்.

சொந்த வாழ்க்கையை கவனிக்கவே நேரமில்லை இதில் சமுதாயத்தை வேறு கவனிக்க வேண்டுமா என்று புனித செயல்களை புறக்கணிக்காதீர்கள். நாம் நமக்காக மட்டும் வாழ்வது சராசரி வாழ்க்கை மற்றவர்களுக்காகவும் வாழ்வது நல்ல வாழ்க்கை, எனக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறவர்கள் விட்டு விட வேண்டிய தீயவைகளை விட்டு, சமுதாய வாட்டங்களை போக்க உங்கள் கரங்களை நீட்டுங்கள்.நல்ல வாழ்க்கை என்பது கடைபிடிக்க வேண்டியவைகளை கடைபிடித்து, விட்டுவிட வேண்டியவைகளை விட்டுவிட்டு அர்த்தமுடன் வாழும் வாழ்வாகும். வாழ்க்கை என்ற ஒரு சொல் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு வார்த்தையாகும். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பமாக வாழும் வாழ்க்கை, தொழில் முறையிலுள்ள வாழ்க்கை, சமூகத்தில் ஒருவனாயுள்ள வாழ்க்கை இப்படி பல அம்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அனைத்து வாழ்விலும் அர்த்தம் இருக்க வேண்டும், பொருள் நிறைந்திருக்க வேண்டும் அதுவே நல்ல வாழ்க்கையாகும்

ஒவ்வொரு வாழ்க்கை அம்சங்களையும் முழுமையாக வாழ வேண்டும், மனதின் எல்லா வெற்றிடங்களையும் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து நிரப்பிக்கொள்ள வேண்டும். வீடு, குடும்பம் என்று சில வாழ்வுகள் எல்லாருக்குமே அமைந்து விடும், ஆனால் சமுதாயத்தில் அர்த்தத்துடன் வாழும் முறையை எல்லோரும் கடைபிடிப்பதில்லை, தொண்டு செய்கிற குணம், சேவை செய்கிற மனப்பான்மை எல்லோருக்கும் வருவதில்லை வாழ்விலுள்ள பல அர்த்தங்கள் சமூகத்திற்கு செய்கின்ற சேவைகளிலும், தொண்டுகளிலும் தான் ஒளிந்துள்ளது.

சேவை செய்வதுதான் மனித நேயத்தின் திறவுகோல், தூய மனதின் அடையாளம், குணங்களை பிரதிபலிக்கும் கண்ணாடி, எளியவர்களுக்கு சேவை செய்பவர்கள் கடவுளை தரிசிக்க வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை, கண்ணை மூடி கடவுளை தேட வேண்டியதில்லை கண்ணை திறந்தே கடவுளை பார்க்க முடியும். வாடிய இதயங்களுக்கு செய்கின்ற சேவை இறைவனுக்கு செய்கின்ற சேவையாகும்.'பிரார்த்தனை செய்யுங்கள், கடவுளுக்கு அருகே நீங்கள் செல்லலாம். சேவை செய்து பாருங்கள், கடவுளே உங்கள் அருகில் வருவார்' என்றார், சமூகப் பணியால் நோபல் பரிசு பெற்ற அன்னைதெரசா.

கடவுளை அடைய வேண்டுமானால் துறவறம் பூண்டு, காவிகட்டி மலைகளுக்கு செல்ல வேண்டியதில்லை சேவை மனப்பான்மை இருந்தாலே போதும் கடவுளை நெருங்கலாம், மனமுருகி சேவை செய்பவன் அரசியல்வாதியாக இருந்தாலும் , நடிகனாக இருந்தாலும் அவர்கள் கடவுளை நெருங்கிக்கொண்டே இருப்பார்கள், எனவே வாழ்க்கை அம்சங்கள் அனைத்திலும் நம்மை அதிகமாக மேம்படுத்திக் கொள்ள வேண்டியது சமுதாய பணிகளில்தான்.

சொந்த வாழ்க்கையை கவனிக்கவே நேரமில்லை இதில் சமுதாயத்தை வேறு கவனிக்க வேண்டுமா என்று புனித செயல்களை புறக்கணிக்காதீர்கள். நாம் நமக்காக மட்டும் வாழ்வது சராசரி வாழ்க்கை மற்றவர்களுக்காகவும் வாழ்வது நல்ல வாழ்க்கை, எனக்கு நல்ல வாழ்க்கை வேண்டும் என்று விரும்புகிறவர்கள் விட்டு விட வேண்டிய தீயவைகளை விட்டு, சமுதாய வாட்டங்களை போக்க உங்கள் கரங்களை நீட்டுங்கள்.