கங்கா ஸ்நானம்

தன் மகனான நரகாசுரன் இறந்த அந்த தினத்தில் எல்லாரும் கங்கையில் குளித்த புண்ணியத்தைப் பெற வேண்டும் என பூமா தேவி கேட்டுக் கொண்டதால் தான் நாம் இன்றும் தீபாவளி குளியலை ''கங்கா ஸ்நானம்'' என்று கூறுகிறோம்.தீபாவளியன்று அனைவரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்கம், அந்த எண்ணெயில் லஷ்மி தேவி இருக்க வேண்டும் என்றும், குளிக்கிற நீரில் கங்கா தேவி இருக்க வேண்டும் எனவும் பூமா தேவி கேட்டுக் கொணடதால் தீபாவளி குளியல் கங்கா ஸ்நானமானது. இப்படி எண்ணெய் தேய்த்து அதிகாலையில் தீபாவளியன்று குளித்தால் லஷ்மியின் அருளும், கங்கையில் குளித்த புண்ணியமும் கிடைக்கும்.இந்த கங்கா ஸ்நானம் செய்தவர்களுக்கு பயம் விலகும். வியாதிகள் நீங்கும். எல்லா செல்வங்களும் பெருகும்