ஆலயம் தொழுவது சாலவும் நன்று

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று". பசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்திருக்கின்றது ஆனாலும் பசுவின் மடியிலிருந்து பாலைப் பெறுகிறோம், கம்பிகளில் மறைந்து நிற்கும் மின்சார ஆற்றல் மின்விளக்கின் மூலம் வெளிப்படுகிறது போல எங்கும் மறைந்து நிறைந்திருக்கின்ற இறைவன் திருவருளைத் திருக்கோயிலின் திருவுருவங்கள் மூலம் பெறுவது எளிது.ஆலயங்கள் சென்று வழிபடுவோர் உள்ளத்தை ஆலயமாகக் கொண்டு இறைவன் எழுந்தருள்கின்றான்."கோபுர தரிசணம் கோடி புண்ணியம்". கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்து வணங்கிக் கோயிலுக்குகள் புக வேண்டும்.கோயில்கள் நமது உடம்பின் வடிலேயே அமைக்ப்பட்டிருக்கின்றன. இதனை திருமூலர்"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம்கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே" என்று கூறுகிறார்."தேஹா தேவாலய: ப்ரோக்தோஜீவோ தேவ: ஸநாதன:த்யஜேத் அஞ்ஞான நிர்மால்யம்ஸோஹம் பாவேன் பூஜயேத்"என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம். சிவா திருச்சிற்றம்பலம்.

ஆலயப் ப்ரகாரங்கள்:-

மூன்று ப்ராகாரங்கள் அன்னமயம், பிராணமயம், மனோமயம் என்ற மூன்று கோசங்களையும் உணர்த்துகின்றன.ஐந்து ப்ராகாரங்கள் இவற்றோடு விஞ்ஞான மயம்,ஆனந்த மயம் எனும் கோசங்களையும் குறிக்கின்றன.ஏழு ப்ராகாரங்கள் ஸ்தூல சூக்ஷ்மங்களை விளக்குகின்றன.

மனித உடலும் ஆலயமும்:-
ஒரு மனித உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுக்குரிய அமைப்பாக மதிக்கப்படுகிறது. ஆலயத்தை "ஆ"+"லயம்" என பிரிக்க வேண்டும். "ஆ" என்றால் உயிர் என்றும், "லயம்" என்றால் லயிக்கின்ற என்றும் பொருள்.உயிர்கள் லயிக்கின்ற இடம் ஆலயம் எனப்படும். மனிதனின் இரண்டு பாதங்கள் கோயில் வாசல் கோபுரங்கள். கொடி மரத்தில் 32 வளையங்கள் இருக்கும். இது மனித உடலின் முதுகுத் தண்டில் உள்ள 32 எலும்பு வளையங்களைக் குறிக்கும். மனிதனின் நாபி ஸ்தானத்தைக் குறிக்க நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தீய குணங்களை இதயத்திலிருந்து நீக்கி பலியிடுவதைக் காட்டும் வகையில் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. புருவ மத்தியை கர்ப்ப கிரகம் என்கிறார்கள்.
சிவா திருச்சிற்றம்பலம்

மனித உடலில் ஆறு ஆதாரங்கள்:-
மூலாதாரம் - ஓம் ஸ்ரீ விநாயகர்
சுவாதிஷ்டானம் - ஓம் ஸ்ரீ பெருமாள்
மணிபூரகம் - ஓம் ஸ்ரீ முருகன்
அனாகதம் - ஓம் ஸ்ரீ சிவபெருமான்
விசுத்தி - ஓம் ஸ்ரீ சூரியன்
ஆக்ஞை - ஓம் ஸ்ரீ அம்பிகை
சிவா திருச்சிற்றம்பலம். 

*

ஆலய வழிபாட்டின் அவசியம் :-

“இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். ஆதலால் நாம் இருக்கும் இடத்திலேயே வணங்கினால் போதாதா? ஆலயத்துக்குச் சென்றுதான் வணங்கவேண்டுமா?” என்று வினவுபவர் பலருண்டு.
பசுவின் உடம்பு முழுவதும் பால் நிறைந்நிருக்கின்றது. பாலைப் பெற முயலுகின்ற ஒருவன் அதன் கொம்பையோ, காதுகளையோ, வாலையோ வருடினால் பால் கிடைக்குமா? எனவே, பால் பெற விரும்புபவன் பசுவின் மடியை வருடிப் பால் பெறுவது போல, இறைவனின் அருளைப்பெற விரும்;புவோன் ஆலயத்திற்குச் சென்று இறைவன் திருமுன் நின்று வழிபட்டு திருவருளைப் பெறவேண்டும்.

இறைவனின் திருவருளைப் பெற்று, இறைவனுடன் உறவாடிய நால்வர்களும், ஆழ்வாராதிகளும் திருத்தலங்கள் தோறும் நடந்துசென்று ஆலயவழிபாடு செய்யும் நியதியை மேற்கொண்டிருந்தனர் என்றால் அதன் பெருமையும், முக்கியத்துவமும் அளவிடற்கரியதன்றோ?

ஆலயங்கள்தோறும் சென்று வழிபடுவோரின் உள்ளத்தை இறைவன் தனக்கு ஆலயமாகக் கொண்டு எழுந்தருளுகின்றான் என்பதை திருமூலர் இப்பாடல் மூலம் விளக்குகின்றார்:

“நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்த சிவபெருமா னென்று
பாடுமின்: பாடிப் பணிமின்: பணிந்தபின்
கூடி நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே”

மனிதனைப் புனிதனாகச் செய்வது ஆலயம். தெய்வ அருளாற்றல் அங்கே நிலவிக் கொண்டு இருக்கின்றது. அங்கு சென்று வழிபடுவோரது வினைகளாகிய பஞ்சுப் பொதிகள், திருவருளாகிய அறைபொறியால் வெந்து சாம்பராகின்றன. இகபர நலன்களை எளிதில் எய்துகின்றன. 

அருட்பயன் பெற்ற ஆன்றோரும் வாசனா மலம் தாக்காதிருக்கும் பொருட்டு ஆலய வழிபாடு புரிவது இன்றியமையாதது என்று இயம்புகின்றது கீழ்க்காணும் சிவஞானபோதம் நூலின் 12 வது சூத்திரம்:

“செம்மலர் நோன்றாள் சேரலொட்டா
அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயம் தானும் அரனெனத் தொழுமே”