சபரிமலை பிறந்த கதை


கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர நாட்டின் ஒரு பகுதி சிதறுண்டு செழுமை குன்றியிருந்தது. உள்நாட்டு கலவரக்காரர்கள் பெருகி நலிந்திருந்தது. கரிமலையில் வசித்த உதயன் என்ற கொள்ளையன் சபரிமலைக்கோயிலை தகர்த்து, பூஜாரிகளை கொன்று, ஐம்பொன் ஐயப்பனை களவாடி சென்றான். எனவே, நாட்டை காக்கும் வீரனாக சாஸ்தா அவதாரம் எடுத்தார்.
உதயன் திருவிதாங்கூர் அரசின் அரண்மனை செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு இளவரசியை கடத்த முயற்சி செய்தான். ஜயந்தன் என்பவன் அவளை காப்பாற்றி மணந்து கொண்டான். அவர்களுக்கு சாஸ்தா மகனாகப் பிறந்தார். "ஐயப்பன்' என்று அவனுக்கு பெயர் சூட்டினர். ஜயந்தன் ஐயப்பனுக்கு யுத்த பயிற்சிகளுடன் அனைத்து கலைகளையும் கற்றுத் தந்தான். பந்தள அரண்மனையில் பணியில் சேர்ந்தார் ஐயப்பன். அவனது அறிவும் வீரமும் மன்னனை கவர்ந்தது. எனவே தன் அரசின் முதல் தளபதியாகவும், பின் பந்தள மன்னனாக்கி தன் வாரிசாகவும் உயர்த்தினான். இதை கடுத்தை, மல்லன் என்ற தளபதிகள் எதிர்த்தனர். இவர்களை வென்று அவர்களுக்கு பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்து கொண்டார் ஐயப்பன். வாபர் என்ற கடல் கொள்ளையனை எதிர்த்து போர் செய்து, தன் நண்பனாக்கி கொண்டார். யோகம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கற்ற ஐயப்பன் மாபெரும் சக்தி பெற்றவராக திகழ்ந்தார். கொச்சியின் தளபதி சிறமூரப்பன் என்பவனை தன் வசப்படுத்தினார். அவனது மகள் "சிறுகூத்தி' என்பவள் ஐயப்பனை மணக்க விருப்பம் கொண்டாள். இதை விரும்பாத ஐயப்பன் அவள் மனதை மாற்றி ஆன்மநெறியில் திருப்பி விட்டார். பாண்டியநாட்டில் இருந்து சேரநாட்டில் புகுந்து கொள்ளையடித்தவர்களை பிடிக்க திட்டமிட்டார். இதற்காக, பாண்டிய மன்னர்களிடம் தான் யார் என்பதை காட்டி கொள்ளாமல், சேவனாக பணி ஏற்றார். தன் வீரத்தாலும், அறிவாலும், நேர்மையாலும் பாண்டிய அரசனிடம் நற்பெயர் பெற்றார். ஆனால் பாண்டிய நாட்டு அரசி, இவன் ஒற்றனாக இருப்பான் என தவறாக கருதி, அதை அரசனிடம் கூறாமல், தனக்கு தலைவலி என்றும், அதற்கு புலிப்பால் வேண்டும் என கூறி ஐயப்பனை காட்டிற்கு அனுப்பினாள். தெய்வப்பிறவியான ஐயப்பன் இந்திராதி தேவர்களை புலிகளாக்கி அரண்மனைக்கு அழைத்து வந்தார். அத்துடன் தான் யார் என்பதை மன்னனிடம் கூறி, பாண்டிய நாட்டு சிற்றரசர்களாலோ, கொள்ளையர்களாலோ தன் நாட்டிற்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என உதவியும் கேட்டார். பாண்டிய மன்னனும் மகிழ்ந்து எப்போதும் உதவி செய்ய காத்திருக்கிறேன் என கூறி அனுப்பி வைத்தான். பந்தளம் வந்த ஐயப்பன், கரிமலைப்பகுதியில் மறைந்திருந்து தொல்லை கொடுத்து உதயனை ஒடுக்க திட்டமிட்டார். தன் படைகளை மூன்று பிரிவுகளாக்கி, அதன் தலைவர்களாக கொச்சுக்கடுத்தை, வாவர், மல்லன் ஆகியோர்களை நியமித்து கொள்ளையர்களை வென்று வர அனுப்பி வைத்தார். அதன்படி அவர்கள் மூவரும் எரிமேலியிலிருந்து ஒன்று கூடி, விரதமிருந்து, களைப்பு தெரியாமல் இருக்க ஆடியும் பாடியும் பெருந்தோட்டில் தங்கி, அழுதாநதியில் குளித்து காவல் தெய்வமான சாஸ்தாவை நினைத்து பூஜை செய்ய வேண்டும். பின் கரிமலை அடைந்து அங்கிருந்து இஞ்சிப்பாறை கோட்டை மற்றும் கொள்ளையர்களின் மறைவிட கோட்டைகளை அழித்து, எதிரிகளை வென்று பெரியானை வட்டம், சிறியானை வட்டம் கடந்து, பம்பை நதிக்கரையில் இறந்த வீரர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும். அந்த நதியை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதன்பின் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் கடந்து, சரங்குத்தியில் மீதி ஆயுதங்களை சேர்க்க வேண்டும். மீண்டும் ஆயுதம் எடுக்கும் நிலை வரக்கூடாது என வணங்கி, பதினெட்டு தத்துவப்படிகளை கடந்து என்னை காண வர வேண்டும் என கூறினார். இதனை அறிந்த பாண்டிய மன்னன் சாஸ்தாவே தன்னிடம் ஐயப்பன் என்ற பெயரில் சேகவம் புரிந்ததை அறிந்து மகிழ்ந்து அவருக்கு சபரிமலையில் கோயில் கட்டினான். - டி.எஸ்.கிருஷ்ணன் வன சக்கரவர்த்தி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அடுத்து பிரசித்தி பெற்ற தலம் அச்சன்கோவில். சிறுவனாக குளத்துப்புழையில் வளர்ந்த சாஸ்தா இளைஞர் பருவத்தில் இத்தலத்தில் வசித்ததாக வரலாறு. இங்கு சாஸ்தா வனத்தை காக்கும் அரசராக பூரணா, புஷ்கலை தேவியருடன் இருக்கிறார். பரசுராமர் கட்டிய இக்கோயிலில் அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூலவர் அருளுவது விசேஷம். இங்கு மார்கழி மாதம் முதல் நாளில் இருந்து பத்து நாள் திருவிழா சிறப்பாக நடக்கிறது. பிற ஐயப்பன் கோயில்களில் இல்லாத சிறப்பாக இத்திருவிழாவின் போது தேரோட்டம் நடத்தப்படுகிறது. விஷப்பூச்சிகளால் கடிபட்டவர்கள் மூலவரின் மேனியில் பூசியிருக்கும் சந்தனத்தை தேய்த்துக்கொண்டால் விஷம் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. நாகராஜா, நாகயட்சி ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் நீராட அமைக்கப்பட்டுள்ள பஸ்மக்குளத்திற்கு வடக்கே நாகராஜாவையும், நாகயட்சியையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். இங்கே சர்ப்ப பாட்டு பாடப்படும். குழந்தை இல்லாத பக்தர்கள், சர்ப்ப பாட்டு வழிபாட்டில் கலந்து கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. நாகயட்சிக்கு பட்டுப்புடவை, பூ, குங்குமம் ஆகியவற்றை வழிபாட்டு பொருட்களாக கொடுக்கலாம். நாகராஜாவிற்கு மஞ்சள் பொடி, கற்பூரம் வழங்கலாம். மாளிகை புறத்தம்மைக்கும் திருவாபரணம் சபரிமலையில் ஐயப்பனுக்கு மட்டுமின்றி மாளிகைப்புறத்தம்மனுக்கும் ஆபரணங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதையும் தனியாக ஒரு பெட்டியில் வைத்து கொண்டு வருகிறார்கள். ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தப்பட்டு பூஜை நடக்கும் போது மாளிகை புறத்தம்மனுக்கும் பூஜை நடத்தப்படும். மகர ஜோதி முடிந்த பிறகும் ஆறு நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும். இந்த ஆறு நாட்களிலும் நடக்கும் விழாவின் நாயகி மாளிகைபுறத்தம்மன் தான். ஐயப்பனை திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். பரிசோதகர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் வாபர் எனும் இஸ்லாமியர் ஒருவர் வசித்து வந்தார். கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களிடம் இருந்து வழிப்பறி செய்து அதனை ஏழைகளுக்கு கொடுத்தார். அப்பகுதியை ஆண்ட அரசரால் அவரை பிடிக்கமுடியாததால், வாபரின் செயலுக்கு முடிவு கட்டும்படி ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். பாலகனாக இருந்த ஐயப்பனின் பேச்சை வாபர் கேட்பதாக இல்லை. எனவே அவரை வதம் செய்ய சென்றார் ஐயப்பன். அவரிடம் வாபர், "என்னைக் கொன்றால் என்னை நம்பியிருக்கும் மக்களுக்கு யார் ஆதரவு?' என்றார். அவர்களை தான் பார்த்துக் கொள்வதாக கூறிய ஐயப்பன், அவருக்கு பரிசோதிக்கும் பணியையும் கொடுத்தார். சபரிமலை செல்லும் வழியில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. பக்தர்கள் இங்கு சென்று தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டுத்தான் சபரிமலைக்கு செல்லவேண்டும் என்பது ஐதீகம். இங்கு விபூதியை பிரசாதமாக தருவது சிறப்பு. மனைவியை பிரிந்த சாஸ்தா ஆரியங்காவில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் உள்ளது மாம்பழத்துறை தலம். புஷ்கலையை மணம் முடித்த சாஸ்தா தனது தொழிலுக்கு அவள் தொந்தரவாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இத்தலத்தில் தங்கும்படி செய்தார். இங்கு புஷ்கலை தேவி, "பகவதி' அம்மனாக "பத்திரகாளி' வடிவத்தில் அருளுகிறாள். பம்பா தர்ப்பணம் பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார் என புராணங்கள் கூறுகின்றன. ஐயப்பனின் சின்முத்திரை பரசுராமர் தர்மசாஸ்தாவின் கோயிலை சபரிமலையில் அமைத்தார். அப்போது மேற்கூரையோ, சுற்றுப்புற சுவர்களோ இல்லை. சாஸ்தாவின் சிலையை மட்டுமே பிரதிஷ்டை செய்தார். இதன்பிறகு மறு அவதாரம் எடுத்த தர்மசாஸ்தா பூமியில் ஐயப்பன் என்ற பெயரில் வளர்ந்து, தர்மசாஸ்தாவின் விக்கிரகத்தில் ஐக்கியமாக தவம் செய்தார். அப்போது சின்முத்திரையுடன் அமர்ந்தார். ஆத்மா, பரமாத்மாவுடன் இணை வதை சுட்டிக்காட்டுவதே சின்முத்திரையின் தத்துவமாகும். ஆரம்பகால பூஜை ஒரு காலத்தில் சபரிமலையில் தர்மசாஸ்தாவுக்கு ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு நாள் மகரஜோதி அன்று மட்டும்தான் பூஜை நடந்தது. நிலக்கல் என்ற இடத்திலிருந்து பக்தர்கள் சென்று பூஜை நடத்தி வந்துள்ளனர். ஐயப்பன் தர்மசாஸ்தாவிடம் ஐக்கியமான பிறகுதான் மண்டல பூஜை, மகரவிளக்கு, மாத பூஜை என படிப்படியாக பூஜைகள் பெருகின. தர்மசாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு என்பதை இந்த தகவல் தெரிவிக்கிறது. பாதுகாப்பாக வரும் கருடன் ஐயப்பனின் வளர்ப்புத்தந்தை பந்தள மகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை பிரியும் காலம் வந்தது. மணிகண்டன் அவரிடம், ""நான் காட்டுக்குள் குடியிருக்க போகிறேன். என்னைக் காணவேண்டுமானால் நீங்கள் மலைகளைக் கடந்து வரவேண்டும். அது சாதாரண மலையல்ல. ஏற்ற இறக்கமும், கல்லும் முள்ளும் கொண்டதாக இருக்கும்'' என்றார். "அப்படியானால் நான் உன்னை எப்படி காணவருவேன்' என மகாராஜா கேட்டார். அதற்கு மணிகண்டன், "நீங்கள் வரும்போது உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டுவான். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்துவிடலாம்' என அருள்பாலித்தார். அதன்படி பல இடங்களில் ஏற முடியாமல் ஆங்காங்கே அமர்ந்துவிடுவார். ஐயோ! அப்பா! என அவர் அடிக்கடி சொல்வார். இந்த சொற்களே திரிந்து "ஐயப்பன்' என ஆகிவிட்டதாக சொல்லப்படுவதுண்டு. இப்போதும் ஐயப்பனுக்கு பந்தளம் அரண்மனையிலிருந்து நகைகளை எடுத்துச் செல்லும்போது கருடன் நகைப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக வருவது விசேஷ அம்சமாகும். பம்பா தர்ப்பணம் பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப்பினும் ராமபிரான் தனது தந்தைக்காகவும், மூதாதையர்களுக்காகவும் பம்பைக்கரையில் தர்ப்பணம் செய்ததை அடிப் படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சபரி அன்னையை பார்ப்பதற்காக ராமன் இங்கு வந்தார். வரும் வழியில் பம்பையில் தர்ப்பணம் செய்தார். பந்தளம் அரண்மனை உருவான ஆண்டு பாண்டிய நாட்டு மன்னர் ஒருவரை அவரதுமந்திரி சூழ்ச்சி செய்து கொல்ல முயன்றார். அவர் மதுரையிலிருந்து தப்பிச் சென்று கேரளத்தை அடைந்தார். பல ஆண்டுகளுக்கு பின் பந்தளத்தில் ஒரு இடம் வாங்கி, ஒரு அரண்மனையை அமைத்தார். கி.பி.903ல் இந்த அரண்மனை உருவாக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகிறது. பின்னால் வந்த மற்ற மன்னர்கள், அரண்மனையை மட்டுமின்றி தேசத்தையும் விரிவுபடுத்தினர். பஸ்மக்குள தீர்த்தம் ஐயப்பன் கோயிலில் புண்ணிய தீர்த்தமாக கருதப்படுவது பஸ்மக்குளம். ஒரு காலத்தில் இக்குளத்து நீர் தேங்காய் தண்ணீரை விட சுவையாக இருந்தது. இதில் பார்வை பட்டாலே பாவங்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. கூட்டம் அதிகமான பிறகு, இதன் பெருமை தெரியாமல் பக்தர்கள் இதன் கரையை கழிவறையாக்கி விட்டனர். தற்போது இக்குளம் ஓரளவு சீரமைக்கப்படிருக்கிறது. பக்தர்கள் தயவு செய்து இக்குளத்தை பாழ்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இக்குளத்தை தூரெடுத்து, தலையில் தண்ணீர் எடுத்து தெளிக்கும் அளவுக்கு மட்டும் வழிகளை அடைத்து விட்டால், இதன் பழம்பெருமை பாதுகாக்கப்படும். ஐயப்பன் வரலாறு காட்டும் தத்துவம் கடவுளை வணங்குவோருக்கு வேண்டியது கிடைக்கும். அப்படி கிடைத்ததை தவறான செயலுக்கு பயன்படுத்தினால் தண்டனையும் உடனே கிடைக்கும். சாகாவரம் பெற்றவர்களுக்குக்கூட ஏதோ ஒரு சக்தியால் அழிவு நிச்சயம். நிலையற்றது இந்த வாழ்க்கை. எனவே வாழும் காலத்தில் நல்லவனாய் வாழ்ந்துவிட்டால் மீண்டும் இந்த பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டாம் என்ற அரிய தத்துவங்களை உணர்த்தும் தலம் சபரிமலை. சபரிமலை ஐயப்பனின் வரலாற்றில் முதலில் ஆடம்பரமான அரண்மனை வாழ்வு.. இது நிலைத்ததா என்றால் இல்லை. தெய்வப்பிறவியான ஐயப்பனுக்கு கூட இந்த வாழ்வு நிலைக்கவில்லை என்றால் சாதாரண மனிதர்களான நமக்கு மட்டும் நிலைத்துவிடுமா என்ன... எனவேதான் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல எளிமையான ஏற்றத்தாழ்வற்ற சீருடை அணிந்து, ஒன்றுபோல இருமுடி கட்டி, ஒற்றுமையாய் கூட்டமாய் போய் அவனை வணங்கிவிட்டு வருகிறோம். தியானத்தில் கவனம் ஐயப்பன் சபரிமலையில் குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். சபரிமலையில் ஐயப்பன் தவமிருக்கும்போது தனது வஸ்திரத்தை முழங்காலை சுற்றி கட்டிக்கொண்டு அமர்ந்தார். தியானத்தில் இருக்கும்போது தன்னை வளர்த்த தந்தை வந்தால்கூட தியானத்திலிருந்து எழக்கூடாது என்ற நோக்கத்திலேயே எழ முடியாத நிலையில் குத்துக் காலிட்டு அமர்ந்துள்ளார் என்று சொல்வதுண்டு. மதுரையில் ஒரு சபரி பரிமலையில் மகரவிளக்கு பூஜை கொண்டாடுவதைப்போல் மதுரை விளாச்சேரி ஐயப்பன் கோயிலிலும் விழா கொண்டாடப்படுகிறது. புதுசாரி விஷ்ணு நம்பூதிரி என்பவர் பார்த்த தேவபிரஸ்னத்தின்படி இக்கோயில் கட்டப்பட்டது. 1980ல் சிருங்கேரி சாரதாபீட மடாதிபதி ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் அடிக்கல் நாட்டினார். இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது. கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த கோயிலை கட்டி முடிக்க 6 ஆண்டு ஆனது. கணபதி, ஐயப்பன், துர்க்கை, நாகர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.1986 ஜூலை 13ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கல்லூர் மாதவன் நம்பூதிரி கும்பாபிஷேகத்தை நடத்தினார். துவஜஸ்தம்பம் (கொடிக்கம்பம்) ஜூன் 2001லும், நவக்கிரகங்கள் 2005லும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இங்கு தினமும் கணபதிஹோமம் நடக்கிறது. ஐயப்பனுக்கு 3 முறையும், துர்க்காதேவிக்கு 2 முறையும் நம்பூதிரிகளால் பூஜை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழியில் சுத்திகலசம், எழுநெல்லிப்பூ, ஸ்ரீபூதபலி, பணி, உத்சவபலி, பள்ளி வேட்டை, ஆறாட்டு, அன்னதானம் ஆகியவை சபரிமலையைப் போலவே நடத்தப்படுகிறது. தற்போது உள்ள கோயிலை சீரமைத்து, சுப்ரமணியர், சிவன், குருவாயூரப்பன் ஆகிய தெய்வங்களுக்கு 45 லட்சம் ரூபாய் செலவில் சன்னதிகள் கட்டப்பட்டு 2007 ஜூலை 15ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அடுத்த கட்டமாக 60 லட்சம் ரூபாய் செலவில் ராஜகோபுரம், தங்கும் விடுதி, தியான அறை, ஆடிட்டோரியம், கோயில் பணியாளர்களுக்கு தங்கும் விடுதி ஆகியவை கட்டப்பட உள்ளது. தினமும் அன்னதானம், மருத்துவ உதவி, சமஸ்கிருத, திருக்குறள் வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பணி தொடர்பாக, பொருளாளர், ஐயப்பா சேவா சங்கம், 175, விளாச்சேரி மெயின்ரோடு, முனியாண்டிபுரம், மதுரை 625 004 போன்: 0452-237 1870 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இருப்பிடம்: மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து(6கி.மீ) விளாச்சேரி செல்லும் பஸ்களில், சவுராஷ்டிரா கல்லூரி ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும். நாலும் அறிந்த நாயகன் நாலும் தெரிந்தவர் என்றால் "அனைத்தும் அறிந்தவர்' என்று பொருள். வேதங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வார்த்தையைச் சொல்வதுண்டு. ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களைக் கரைத்துக் குடித்தவரே நாலும் அறிந்தவர் என்ற பொருளில் சொல்லப்படுவதுண்டு. சபரிமலை ஐயப்பனும் "நாலும் அறிந்தவர்' ஆகிறார். ஏனெனில், அவர் நான்கு ஆசனங்களையும், நான்குவித முத்திரையையும் உள்ளடக்கி அருள்பாலிக்கிறார். ஐயப்பனின் 4 ஆசனங்கள்: 1.தியானபிந்து ஆசனத்தில் அபய சின்முத்திரையிலும், 2.கிருஹ நாரீய பீடாசனத்தில் யோகப் பிராணா முத்திரையிலும், 3.குத பாத சிரேஷ்டாசனத்தில் அபான பந்த முத்திரையிலும், 4.அஷ்ட கோண சாஸ்தாசனத்தில் யோக பத்ராசனத்திலும் அருள் பாலிக்கறார். இப்படி நான்கு ஆசனத்தில் நான்குவித முத்திரையுடன் அருள்பாலிப்பது ஐயப்பன் மட்டும் தான். படத்தில் காட்டியுள்ளபடி, ஐயப்பன் லிங்க வடிவில் (மேல்முக்கோணம்) ஆண் தன் மையாகவும், சங்கு வடிவில் (கீழ் முக்கோணம்) பெண் தன்மையாகவும் இரண்டறக் கலந்து உலக உயிர்கள் அனைத் தையும் காக்கும் காவலனாக விளங்குகிறார். சிவனது நெற்றிக்கண் பொறியிலிருந்து தோன்றியவர் முருகன். இவரது சின்னம் அறுகோண நட்சத்திரம். ஐயப்பனை முருகனின் இன்னொரு அம்சமாகவும் சொல்லலாம். அறுகோணத்தை பிரித்தால், மேல் முக்கோணம், கீழ் முக்கோணம் என இரண்டு முக்கோணம் வரும். இந்த இரண்டு முக்கோணமும் சேர்ந்த அமைப்பில் தான் ஐயப்பன் தவமிருக்கிறார். சிவன் ஞானத்தை வழங்குகிறார். விஷ்ணு மோட்சத்தை வழங்குகிறார். இவர்களின் அம்சமாக உள்ள அரிகரபுத்திரனோ இவை இரண்டையும் வழங்கும் வள்ளலாக விளங்குகிறார். ஐயப்பன் சிவனின் உடுக்கையை படுக்கவைத்த நிலையில் உள்ள பீடத் தில், சிவனைப்போல் தியான கோலத்திலும் (முக்தி தருவது), விஷ்ணுவை போல் விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) அருள் பாலிப்பது மிகவும் விசேஷமாகும். ஐயப்பன் முழங்கால்களை கட்டியிருப்பது, சிவன் பார்வதி வந்தால் கூட எழுந்திருக்கக்கூடாது என்பதற்காக என கூறப்படுவது சரியானதாகாது. அவர், கால்களை தன் முதுகு தண்டெலும்பின் கீழ்பகுதியுடன் சேர்த்து கட்டி, ஆசனப்பகுதியும், இரண்டு பாதமும் தரையில் படும்படி குத்துக்காலிட்டு அமர்ந்துள்ளார். மன அமைதி, தெளிந்த சிந்தனை, எதையும் சாதிக்கும் மன ஆற்றல், அஷ்டமாசித்தி ஆகியவற்றை இந்த ஆசனம் தரும். யோகநிலையில் காலை வைத்து, வயிற்றை அழுத்தி, மூச்சை அடக்கி, குண்டலினி சக்தியை மேலெழுப்பி, அந்த சக்தியை ஞான சக்தியாக மாற்றி, தனது திறந்த கண்கள் மூலம் பக்தர்களை பார்த்து அவர்களுக்கு ஆசி வழங்கும் நிலையில் இருப்பதால் தான், கலியுகத்திலும் தன்பக்கம் பக்தர்களை இவ்வளவு அதிகமாக ஈர்க்கமுடிகிறது. ஐயப்பன் தன் வலது கையில் பரமாத்மாவுடன் ஜீவாத்மா கலக்கும் முத்திரையையும், இடது கையில் ஜீவாத்மா பரமாத்மாவின் பாதத்தை சரணடையும் தத்துவத்தையும் குறிக்கிறார். அதாவது, மனிதன் இறைவனை சரணடைந்தால் அவனுடன் கலந்து விடலாம் என்பதை ஐயப்பனின் முத்திரை குறிக்கிறது. இந்த ஆசனத்தை சாதாரண மனிதர்கள் செய்வது கடினம். ஐயப்பனின் இந்த ஆசனத்தை நாம் விரதமிருந்து சுத்தமான கண்களுடனும், மனதை அடக்கிய நிலையிலும் பார்த்தால், நமது உள்ளம் நிரந்தரமாக தூய்மையாகி விடும். படிப்பு தரும் குட்டி சாஸ்தா கேரளாவில் குளத்துப்புழை என்ற இடத்தில் சாஸ்தா கோயில் உள்ளது. இங்கு சாஸ்தா, குழந்தை வடிவில் இருக்கிறார். கருவறை நுழைவு வாயில் சிறுவர்கள் புகும் அளவிற்கு உயரம் குறைந்து உள்ளது. செங்கோட்டையில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. விஜயதசமி தினத்தன்று இங்கு "வித்தியாரம்பம்' எனும் நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. இந்நாளில் பள்ளியில் புதிதாக சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி தரப்படும். குழந்தைகளின் படிப்பு சிறப்பாக அமைந்திட "குட்டி சாஸ்தா' அருள்புரிவார் என்பது நம்பிக்கை. சரண கோவை மாலை அணிந்து விரதமிருப்பவர்கள் தினமும் காலை, மாலையில் நீராடி விட்டு ஐயப்பனின் 108 சரணக்கோவையை மனதில் பயபக்தியுடன் பாடவேண்டும். இதனை மிகவும் மாப்பிள்ளை ஐயப்பன் சபரிமலையில் பிரம்மச்சரியம் காக்கும் சாஸ்தா கிரகஸ்த (குடும்பம்) நிலையில் ஆரியங்காவில் இருக்கிறார். செங்கோட்டையில் இருந்து 20 கி.மீ., தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இங்கு சாஸ்தா, புஷ்கலாதேவியுடன் மாப்பிள்ளை கோலத்தில் காட்சி தருகிறார். சவுராஷ்டிரா இன மக்களின் குல தெய்வமான புஷ்கலாவின் இங்கே சாஸ்தாவுடன் ஐக்கியமானார். அவரை சாஸ்தா திருமணம் செய்யும் காட்சியை ஒவ்வொரு டிசம்பர் மாதமும் இங்கு நடத்துவர். மதம் கொண்ட யானையை அடக்கி அதன் மேல் அமர்ந்த கோலத்தில் இங்கு சாஸ்தா இருப்பதால் "மதகஜ வாகன ரூபன்' என்றொரு பெயரும் உண்டு. இவரை வணங்கினால் தடைபட்ட திருமணங்கள் விரைந்து நடக்கும் என்பது நம்பிக்கை. ஐயப்பன் கோயிலில் தீப வழிபாடு கோயம்புத்தூர் சித்தாபுதூரில் ஐயப்பன் கோயில் உள்ளது. சபரிமலை கோயில் போலவே கட்டப்பட்டிருப்பதும், அங்கு நடக்கும் பூஜை முறைகளைப் போலவே பூஜைகள் செய்வதும் இத்தலத்தின் சிறப்பு. நம்பூதிரிகளே இங்கு பூஜைகளை செய்கின்றனர். பிரகாரத்தில் நெய்தீப மேடை உள்ளது. ஐயப்பனிடம் வேண்டிக்கொண்டு இங்கு தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தீமைகள் விலகி நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. குருவாயூரப்பன், பகவதிதேவி, பிரம்மரக்ஷி, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது. சென்னை ஐயப்பன் சென்னை பாரிமுனை அரண்மனைக் கார தெருவில் உள்ள கச்சாலீஸ்வரர் கோயிலில் ஐயப்பனுக்கு சன்னதி உள்ளது. சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஐயப்பன் சிலை கொண்டு செல்லப்பட்ட போது அவரை சில தலங்களில் வைத்து பூஜை செய்தனர். இங்கு பூஜை செய்தபோது மூன்று நாட்கள் வரையில் சிலையை எடுத்துச் செல்ல சுவாமியின் உத்தரவு கிடைக்கவில்லை. இதன் பிறகே எடுத்துச் சென்றனர். சபரிமலை ஐயப்பன் இங்கிருந்ததை நினைவூட்ட, தனியாக சன்னதி அமைக்கப் பட்டது. சபரிமலையில் நடப்பது போலவே இவருக்கு பூஜைமுறை கடைபிடிக்கப்படுகின்றன. மகரஜோதி விழாவும் நடத்தப்படுகிறது. வில்வ இலை அபிஷேகம் சிவ, விஷ்ணுவின் மைந்தனாக பிறந்த ஐயப்பன் கிராமங்களில் அய்யனாராக அருள்புரிகிறார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், மோகினியாக இருந்து தன்னைப் பெற்ற பெருமாளின் பெயரையும் சேர்த்து "சேவுகபெருமாள் அய்யனார்' என்றழைக்கப்படுகிறார். அத்துடன் தனது தந்தை சிவனுக்கு உகந்த வில்வ இலையை பூஜிக்கும் பேறு பெற்றவராக இருக்கிறார். மகுடம், பட்டைகள் அணிந்து வீராசனத்தில் அமர்ந்து பூர்ண புஷ்கலா தேவியுடன் காட்சி தருகிறார். சிவன் சுயம்பு மூர்த்தியாக பூவைவல்லி அம்பாளுடன் அருள் பாலிக்கிறார். தந்தையும், மகனும் ஒரே இடத்தில் தரிசனம் தரும் அற்புத தலம் இது.

சபரிமலை ஐயப்பன் வரலாறு


 திருப்பாற்கடலை கடைந்தபோது அசுரர்களை மயக்குவதற்காக திருமால் மோகினி வடிவம் எடுத்தார். அந்த வடிவைக்கண்டு பரவசம் அடைந்த சிவபெருமான் அவளை தழுவி நின்றார். அவ்வேளையில் சிவவிஷ்ணுவின் ஆற்றல்கள் அனைத்தும் ஒன்றிய தர்மசாஸ்தா அவதரித்தார். அவரது பிறப்பிற்கு காரணம் இருந்தது. கரம்பன் என்ற அசுரனின் மகளான மகிஷி எருமைத்தலையுடன் பிறந்தாள். இவளது சகோதரன் மகிஷாசுரனை சண்டிகாதேவி கொன்றாள் என்பதற்காக அச்செயலுக்கு பரிகாரம் காண்பதற்கு விந்தியமலைக்கு சென்று தவமிருந்தாள். தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தை கேட்டாள். பிரம்மா மறுக்கவே, ஒரு ஆணுக்கும் மற்றொரு ஆணுக்கும் பிறக்கும் குழந்தையால்தான் தனக்கு அழிவு வரவேண்டும் என வேண்டிக்கொண்டாள். அந்த மகிஷியை அழிக்கவே, தர்மசாஸ்தாவின் அவதாரம் அமைந்தது.

பின்பு பூவுலகிற்கு மகிஷி வந்தாள். அவளை அழிக்கும் எண்ணம் கொண்ட சிவன் சுந்தரன் என்ற ஆண் மகிஷத்தை உருவாக்கினார். மகிஷி அவன்மீது காதல் கொண்டாள். அவர்கள் இணைந்து வாழ்ந்துவந்தனர். தர்மசாஸ்தா ஆரம்பத்தில் சிவனுடன் கயிலாயத்திலேயே வாழ்ந்தார். பின்னர் மகிஷியை அழிப்பதற்காக 12 ஆண்டுகள் மானிடனாக வாழ்வதற்கு பூவுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவ்வாறு பூவுலகில் அவர் பிறந்தநாளே மார்கழி மாதம், சனிக்கிழமை உத்திர நட்சத்திரத்தில் ஆகும்.
  
காட்டில் விழுந்துகிடந்த அந்த குழந்தையை பந்தள மன்னர் ராஜசேகரன் கண்டார். குழந்தை இல்லாத அவர் அக்குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார். செல்லும் வழியில் முதியவர் வடிவில் தோன்றிய திருமால் குழந்தையின் கழுத்தில் கனகமணி மாலை ஒன்றை சூட்டி, மணிகண்டன் என்று குழந்தைக்கு பெயர் சூட்டினார்.
 குழந்தையுடன் அரண்மனைக்கு சென்றதும், மகாராணியும் மகிழ்ச்சி அடைந்தாள். மணிகண்டன் சென்ற நல்வேளையில் அவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராஜராஜன் என பெயர் சூட்டினர். தனக்கென்று குழந்தை பிறந்தாலும் பந்தள ராஜா தன் முதல் மகனான மணிகண்டனுக்கே பட்டம் சூட்ட விரும்பினார். இதை வஞ்சனை நிறைந்த அமைச்சர் ஒருவர் விரும்பவில்லை. மகாராணியின் மனதை மாற்றி, ராஜராஜனுக்கு முடிசூட்டும்படி கூறினார்.

மகாராணியும் ஐயப்பனை கொல்வதற்காக தலைவலி வந்ததுபோல நடித்தார். மருத்துவர்கள் மூலமாக புலிப்பால் கொண்டு வந்தால்தான் தலைவலி சரியாகும் என கூறச்செய்தாள். மணிகண்டனும் காட்டிற்கு சென்றான். காட்டிலிருந்த பூதகணங்கள் அவரை வரவேற்றன. முனிவர்கள் அவரை பொன்னம்பலத்திற்கு அழைத்துச்சென்று, ரத்தின சிம்மாசனம் அமைத்து, பூஜித்து வழிபட்டனர். இந்த இடமே தற்போது மணிகண்டன் ஜோதியாக காட்சிதரும் பொன்னம்பலமேடு ஆகும்.
 அங்கிருந்தபடியே அவர் மகிஷியுடன் போரிட்டார். அவள் அழுதை நதிக்கரையோரம் விழுந்தாள். தன்னை மிதித்துத்தள்ளியது ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த ஒருவனே என்பதை உணர்ந்த மகிஷி உயிர்பிரியும் நேரத்தில் அவரை வணங்கி நின்றாள். ஐயப்பன் அவளது உடலை தன் கரத்தால் தடவவும், அவள் அழகிய உரு பெற்றாள்.
 தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென வேண்டினாள். இப்பிறப்பில் பிரம்மச்சாரியாக வாழ முடிவு செய்திருப்பதைக்கூறிய ஐயப்பன் தனது இடப்பாகத்தில் சிறிது துõரத்தில் நிலைகொள்ளும்படி அருள்புரிந்தார். அவளே மஞ்சமாதா என அழைக்கப்படுகிறாள்.
 பின்பு புலிகளுடன் ஐயப்பன் நாடு வந்தார். அவரது திறமையை அறிந்த மக்களும் மன்னரும் தலை தாழ்த்தி வணங்கினர். எதிரிகளும் மன்னிப்பு கேட்டனர்.
 பின்பு தனது 12 வயது முடிந்துவிட்டதை மன்னரிடம் உணர்த்திய மணிகண்டன், தான் ஒரு தெய்வப்பிறவி என்பதை ஒப்புக்கொண்டார். அங்கிருந்து ஒரு அம்பை எய்வதாகவும், அது எந்த இடத்தில் விழுகிறதோ அங்கு தனக்கு கோயில் கட்டும்படியும் பந்தள மன்னருக்கு அருள்பாலித்தார். அதன்படியே பந்தளராஜா கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். பரசுராமரின் உதவியுடன் மகர சங்கரம நாளில் சனிக்கிழமையன்று கோயில் உருவாக்கப்பட்டது. மாளிகைப்புறத்தம்மை, கருப்பசுவாமி, கடுத்தசுவாமி ஆகியோருக்கும் சிலைகள் அமைக்கப்பட்டன. இதனால்தான் சனிக்கிழமைகளில் ஐயப்பன் கோயிலுக்கு சென்றுவருவது இரட்டிப்பு பலன் தரம்.

சித்தர் சமாதி


சித்தர் சமாதி என்பது, சித்தர்கள் தங்கள் யோக நெறியினால் முத்தி நிலையடைந்த பின்பு, அவர்கள் தங்கள் உடலின் இயக்கத்தை நிறுத்தி வைத்து விட்டு, பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த உடலை மீண்டும் இயங்கவைத்து உலகத்தில் நடமாடுவது என்பர். சித்தர் தங்கள் உடலியக்கத்தை நிறுத்திவிட்டு, உடலைப் பூமிக்குள் புதைத்து வைக்கச் செய்வர். அவ்வாறு உடல் புதைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடம் சமாதி எனப்படும். சமாதி நிலையில் இருப்பதும் யோக நெறியின் உச்ச நிலையென உரைக்கப்படுகிறது.

அவ்வாறு, சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களாகத் தமிழகத்திலும் பிற இடங்களிலும் சுமார் 39 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வாரு இடமும் ஒவ்வொரு சித்தர் அடங்கிய இடமாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் அடங்கிய 39 இடங்களும் இன்றைய நிலையில் சைவ மதத்தின் திருக்கோயில்களாகவும் வழிபாட்டிடங்களாகவும் இருக்கின்றன. சித்தர்கள் அடக்கமாகிய சமாதிகள் சைவமதத்தின் திருக்கோயில்களாக மாறியது பற்றிய உண்மை ஆராய்தற்கு உரியது.
தில்லையில் திருமூலர்,

 அழகர் மலையில் இராமதேவர்,

அனந்த சயனத்தில் கும்ப முனி,

அருணையில் இடைக்காடர்,

வைத்தீஸ்வரன் கோயிலில் தன் வந்தரி,

 எட்டுக்குடியில் வான்மீகர்,

 மருதாசலத்தில் பாம்பாட்டி,

 மாயுரத்தில் குதம்பை,

ஆருரில் கமல முனி,

பழநியில் போகர்,

பரன்குன்றில் குதம்பை,

திருப்பதியில் கொங்கணர்,

இராமேசுரத்தில் பதஞ்சலி,

காசியில் நந்தி,

கருவூரில் காங்கேயர்,

பொய்யூரில் கோரக்கர்,

சோதிரங்கத்தில் சட்டமுனி,

மதுரையில் சுந்தரானந்த தேவர்  

இந்த இடங்களில் அமைந்த ஆலயங்களில் எல்லாம், மக்கள் கூட்டம் ஏன் அலை மோதுகிறது என்கிற கேள்விக்கு , உண்மை உங்களுக்கு புலப்படக்கூடும். 


சித்தர்கள்  இன்றும்  அருள் பாலிக்கும் இடங்கள் :  

கலசப்பாக்கம் மலபீடான் சித்தர் என்ற பூண்டி சித்தரின் ஜீவசமாதி சென்னை அருகில் போரூர்/கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் உள்ளது.இவர் மாத சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகிறார்.

ஸ்ரீபெருமானந்த சித்த சாமிகள்(தேனி மலை) அவர்களின் ஜீவசமாதி புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் காரையூர் வழியில் உள்ள தேனி மலையில் இருக்கிறது.ஏராளமானவர்கள் இவரை வழிபட்டுவருகின்றனர்.

வாத்யார் ஐயா ஸ்ரீமுத்துவடுகநாத சித்தர்(சிங்கம்புணரி) ஸ்ரீவராஹி உபாசனையில் அனுபவம் மிக்கவர்.இவரது ஜீவ சமாதி எங்கு இருக்கிறது எனத்தெரியவில்லை; திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீவராஹி தீர்த்தத்திற்கு தினமும் வந்து வழிபடுகிறார்.தவிர தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீவராஹி சன்னதி, கும்பகோணம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வராஹி அம்மன் சன்னதிக்கு தினமும் வந்து வழிபடுகிறார்.இவர் தினமும் இந்தியா முழுக்க சூட்சும ரீதியாகப் பயணிக்கிறார். இதனால்தான் மாந்திரீகக்கட்டுக்களால் இந்தியா பாதிக்கப்படுவதில்லை.

ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் திருவிசைநல்லூர், திருமா நிலையூர், கரூர், கராச்சி,மானாமதுரை, நெரூரில் ஜீவசமாதி யடைந்துள்ளார்.

சீரியா சிலம்பாக்கினி சித்தர் திருஅண்ணாமலையில் வசிக்கிறார்.இவர் பெயரில் சிலம்பாக்கினி மலை ஒன்று அங்கு உள்ளது.

ஸ்ரீபெத்தநாராயணசித்தர் பல நூற்றாண்டுகளாக திருஅண்ணாமலையில் வாழ்கிறார்.  ஸ்ரீஉண்ணாமுலை சமேத ஸ்ரீஅண்ணாமலை ஈசனே போற்றி என வணங்கி  ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம் என கிரிவலம் செய்யும்போது ஜபித்து ஆங்காங்கே பூக்களைத் தூவிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான நற்பலன்கள் உண்டு.

இடியாப்பசித்தர் இமயத்தில் அன்னபூரணி சிகரங்களில் உறைந்திருக்கிறார்.

சீனந்தல் சிவப்பெருவாளச்சித்தர் திருஅண்ணாமலையில் பிறந்தவர்.ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் உணவு சார்ந்த பிரச்னைகள் தீரும்.உணவகம், காய்கறி , மளிகைப்பொருள் வியாபாரம் செழிக்கும்.வயிறு சார்ந்த நோய்கள் தீரும். அன்ன துவேஷத்தால் சரியாக சாப்பிடமுடியாதவர்கள் ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் குணமாகும்.

திருவல்லம் பாம்பணையான் சித்தர் மார்கழிமாத பவுர்ணமி அன்று மனிதவடிவில் கிரிவலம் அண்ணாமலையில் வந்துகொண்டிருக்கிறார். இவரை நினைத்தாலே பாம்புகளால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

கணதங்கணான் சித்தர் இவர்தான் மாத சிவராத்திரி மகிமையை பூமிக்கு உணர்த்தியவர்.இங்குதான் வசிக்கிறார். ரோகிணி,திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களின் கபாலம் சார்ந்த நோய்கள் குணமாகும்.சிலந்தித் தலைவலி, மைக்ரான் தலைவலி குணமாகும்.

மாதசிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்த ஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவர் தரிசனம் பாக்கியம் உள்ளோருக்கு கிட்டும்.

இடைக்காடர் திருஅண்ணாமலை, திருவிடை மருதூர், இடைக்காட்டூரில் ஜீவசமாதியடைந்திருக்கிறார். இவர் கோடி ஆண்டுகளுக்கு கார்த்திகை தீபம் தரிசித்தவர். திருஅண்ணாமலைபற்றி பரிபூரண ரகசியம் அறிந்தவர் இவர் மட்டுமே!!!

 ஒரு தடவை தீபம் பார்த்தாலே , எவ்வளவோ புண்ணியம்.. கோடி தடவை.. யோசித்துப் பாருங்கள் !! இன்றும் இடைக்காடர் , அண்ணாமலை ஆலயத்திலும், கிரிவலப் பாதையிலும் அரூபமாகவோ, வேறு ரூபமேடுத்தோ உலவுகிறார். உங்களுக்கு யோகமெனில், அவர் தரிசனம் கிடைக்க கூடும். 

எந்த நாளிலும், நீங்கள் கிரிவலம் செல்லலாம். சித்த புருஷர்களின் உடலை தழுவி வரும் காற்று , உங்கள் மேல் பட்டாலே , உங்களுக்கு வாழ்வில் நல்லதொரு ஏற்றம் உண்டாகும். 

சித்தர்கள் மலைகளிலேயே தங்கள் குடிலை அமைத்துக் கொண்டு மருந்தாய்விலும் யோக நெறியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் வாழ்ந்த மலை ‘சித்தர் பருவதம்’ என்று வழங்கப்படும். சதுரகிரி மலையையே சித்தர் பருவதம் என்பர். இம்மலையில் அனேக சித்தர்கள் வாழ்ந்ததாகச் சதுரகிரிமலை தலபுராணம் கூறுகிறது. சதுரகிரி மலையைச் சித்தர்கள் பல பெயர்களால் வழங்கினர். போதகிரி, பொதிகைகிரி, சூரிய கிரி, மயேந்திர கிரி, கும்ப கிரி, பரம கிரி, கயிலாயம் என்னும் வேறு வேறு பெயர்களால் குறிப்பிடும் போது, இடங்களைக் கண்டறி வதில் மயக்கம் உண்டாகிறது. 

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் , சதுரகிரியோ அல்லது திருவண்ணாமலை யோ - அடிக்கடி சென்று வந்து கொண்டு இருங்கள். ஈசன் , உங்களை நிச்சயம் நல்லதொரு நிலையில் வைப்பது உறுதி.   

தேவ கடன்,ரிஷி கடன்,பித்ரு கடன்

தேவ கடன்,ரிஷி கடன்,பித்ரு கடன்  -  இந்த மூன்று கடன்களும் எப்படி ஏற்படுகின்றன?ஜாதக வாயிலாக இதை எப்படி அறியலாம்? அதை எப்படி சரி செய்வது?

கடமையைச் செய்யாமல் விடுதலே கடன் எனப்படும்.

தேவகடன் என்பது நித்திய பூஜையைச் செய்யாமல் விடுவது;குல தெய்வத்தை வழிபடாமல் இருப்பது;கோயில் திருப்பணியை தொடங்கிவிட்டு பாதியில் விட்டுவிடுவது; நேர்த்திக்கடன்களை செய்யாமல் விடுவது;
தவிர கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்களைத் திருடுதல்;கோவில் சிலைகளைத் திருடுதல்;கோவிலின் பெயரைச்சொல்லி வருமானம் பார்த்தல்; கோயிலுக்குள் தகாத காரியங்கள் செய்தல் ஆகும்.
இவற்றை ஜாதகம் வாயிலாக, லக்னத்துக்கு 5ஆம் இடம்,சூரியன்,சனி இவர்களின் இருப்பைக் கொண்டு அறியமுடியும்.

ரிஷி கடன் இந்த கலிகாலத்தில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு.ஏனெனில், தற்காலத்தில் நிஜமான ரிஷிகள் மிகக்குறைவாக இருக்கின்றனர்.

முற்காலத்தில் வீடு தேடிவந்த ரிஷிகளை சரியாக உபசரிக்காமல் விடுவதால் ரிஷிகள் விடும் சாபமே ரிஷிகடன் ஆகும்.இந்த ரிஷிகடனை 12ஆம் இடம்,குருவின் நிலை,12 மற்றும் 9 ஆம் இடத்து அதிபதிகளைக் கொண்டு அறியலாம்.
ரிஷிகடனைத் தீர்க்க பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்,தண்ணீர் ஏற்பாடு செய்தல்,ஆன்மீகமடங்களில் உதவி செய்தல்,சுத்தப்படுத்துதல், நோயாளிகளுக்கும்,கோவில்களுக்கும் நேரடியாக உதவி செய்தல் செய்ய வேண்டும்.

பித்ருக்கடன் என்பது தாய் தந்தையரை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளாமல் இருப்பதும்,அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கு திதி செய்யாமல் இருத்தல்,அவர்கள் எவ்வளவு அரக்கக் குணங்களுடன் இருந்தாலும் அதை சகிக்காமல் அவர்களிடம் சாபம் வாங்குமளவுக்கு சேஷ்டைகள் செய்யாமல் இருத்தல் போன்றவைகளால் உருவாகுவது.
இதனால் 7 தலைமுறைகள் பாதிக்கப்படும்.தந்தை வழியில் செய்த காமக்குற்றங்கள், மோசடி,பெண்ணை ஏமாற்றிக்கற்பழித்தல்,உடன் பிறந்தோர் சொத்து அபகரிப்பு இவற்றால் 7 தலைமுறைகள் மிகவும் சிரமப்படுவர்.இந்த பித்ருக்கடனை அவரவர் பிறந்த ஜாதகத்தில் 5ஆம் இடம்,9 ஆம் இடம்,ராகு,கேது,சனி இவற்றைக் கொண்டு அறியலாம்.

சித்தர்களின் தலைவர் அகத்தியர் கர்ம காண்டம் என்னும் நூலில் செய்த பாவங்களுக்குரிய விளைவுகளை விரிவாக விளக்கியுள்ளார்.

ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும்.அதே சமயம் திரும்பவும் அதே பாவங்களை செய்யாமலிருக்க வேண்டும்.

பித்ருக்கடன்கள் பல்வேறு வழியாக வருவதால் பரிகாரங்களும் பல்வேறு விதமாக இருக்கின்றன.அவரவர் ஜாதகம் பார்த்து உரிய பரிகாரம்(பூஜை,யாகம் செய்வது மட்டுமல்ல;நாம் நமது மனப்பூர்வமான இறை காரியங்கள் மட்டுமே நம்மை கடன்களிலிருந்து விடுவிக்கும்.நாம்தான் நமது பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.)

தூய பக்தி, நேர்மையான வாழ்வு, மனமார்ந்த தெய்வீக சேவை இவற்றால் நிம்மதியாக வாழமுடியும்.

கட்டைவிரல் அளவே காட்சி தந்த சித்தர்

ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தின் எல்லையில் சதுரகிரிக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வருகிறார்கள்.இங்கு ஒரு முறை அமாவாசைக்கு சதுரகிரி மலை ஏறும்போது அத்தி ஊத்து என்னும் இடத்தில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த க.தேவன் என்பவர் தனது நண்பர்களோடு சிறிதுநேரம் தங்கி இளைப்பாறினார்.அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க ஒரு பாத்திரத்துடன் நீர்நிலையின் அருகே சென்றார்.ஒரு தொட்டி அளவிற்கு தண்ணீர் பளிச் சென தேங்கி நின்றது.அதில் பாத்திரத்தை குளத்தில் வைக்கச் செல்லும் போது அவருக்கு ஒரு காட்சி பெரும் வியப்பைத் தந்தது.
photo
நமது கட்டைவிரல் அளவில் ஒரு மனிதன் நீரில் விழுவதும் எழுவதுமாக விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தார்.அப்போது அவரது குழுவில் உள்ள ஒருவர் திடீரென இவரைப் பார்த்துக் குரல் கொடுத்தார். அந்தக் குரல் கட்டைவிரல் அளவுள்ள மனிதருக்கும் கேட்டிருக்கும் போல அதே சமயம் தேவனும் அவர் நண்பரும் ஒரு வேட்டியில் அந்த கட்டைவிரல் மனிதரைப் பிடிக்க யத்தனித்தனர். அப்போது அந்த கட்டைவிரல் அளவுள்ள மனிதர் தண்ணீரிலிருந்து மேலே வந்து மறைந்துவிட்டார்.
 
அப்படி மறையும்போது ஓம் என்ற ஓங்கார ஓசை தேவன் காதுகளில் ஒலித்தது. ‘கட்டைவிரல் மனிதன்’ நீரில் இருந்து வெளியே வரும்போது அபரிதமான ஒலியுடன் கூடிய சபதம் கேட்டது.


photo

அந்த குழுவில் விபரமறிந்தவர் கட்டைவிரல் மனிதர் ஒரு சித்தரேதான் எனக்கூறினார்.

18 சித்தர்களின் கோவில்கள் இருக்கும் இடங்கள்


18 சித்தர்களின் கோவில்கள் இருக்கும் இடங்கள்

சித்தர் என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்றும், சிந்தை உடையவர் என்றும் பொருள்.

சிவத்தை நினைத்து அகக்கண்ணால் கண்டு, தியானித்து தரிசனம் செய்து, ஆத்ம சக்தியை எழுப்பி, செயற்கரிய காரியங்களை செய்வது சித்த மூர்த்திகளது செயலாகும். இச் செயலை சித்து விளையாட்டு என்று ஆன்மீக ஞானிகள் கூறுவர்.

இன்று பல பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் மூலவருக்கு அருகிலேயே சித்தர்கள் சன்னதி இருக்க காணலாம். சித்தர்கள் யோக சமாதி அடைந்த இடங்கள் மகிமை பெற்ற திருத்தலங்களாக விளங்குகின்றன. 

அந்த சன்னதியில் மனதை ஒருமுகப்படுத்தி இறைவனிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும், செய்வது வெற்றி பெறும் 

இன்று பழனிமலையின் பிரபலமும், சக்தியும் உலகம் அறிந்த ஒன்றாகும். அந்த ஸ்தலத்தில் நவபாஷானத்தால் குமரன் வடிவேலனை உருவாக்கியவர் யோக சமாதியை விரும்பிய போகர் என்ற சித்தரே.

அதே போன்று இன்று உலக மக்கள் திருப்பதி மலை நோக்கி சென்று வருவதற்கும் அந்த ஸ்தலம் உலக பிரசித்தி பெற்றதற்கும் காரணம் அங்குள்ள கொங்கணவர் என்ற சித்தரே. 

அப்படிப்பட்ட சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.

அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த 18 சித்தர்கள் இன்றும் அருள் தரும் சன்னதிகளின் விவரம் இதோ

திருமூலர் - சிதம்பரம்

இராமதேவர் - அழகர்மலை

அகஸ்தியர் - திருவனந்தபுரம்

கொங்கணர் - திருப்பதி

கமலமுனி - திருவாரூர்

சட்டமுனி - திருவரங்கம்

கரூவூரார் - கரூர்

சுந்தரனார் - மதுரை

வான்மீகர் - எட்டிக்குடி

நந்திதேவர் - காசி

பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்

போகர் - பழனி

மச்சமுனி - திருப்பரங்குன்றம்

பதஞ்சலி - இராமேஸ்வரம்

தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்

கோரக்கர் - பொய்யூர்

குதம்பை சித்தர் - மாயவரம்

இடைக்காடர் - திருவண்ணாமலை

கீதை கூறும் ஆன்மீகம்

வேதங்களின் உதாணரமான உபநிடதம், பகவத் கீதை, மகாபாரதம், இராமயாணம்,முக்கியமாகக் கருதப்படுகிறது. இவற்றுள் பகவத்கீதை என்ற புகழ் வாய்ந்த பகுதி மகாபாரத்தில் உள்ளது. குருசேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்-கெளரவ அணிகளுக்கிடையில் போர் மூளவிருந்த சூழலில் பாண்டவ வீரனான அர்ச்சுனன் உறவு சார்ந்த உணர்வுகளால் பாதிக்கப்பட்டு மனம் சோர்ந்து உள்ளான். இந்நிலையில் ,சாரதியான கிருஷ்ணன் அவனது மனச்சோர்வுக்கான அடிப்படைகளை அகற்றும் வகையில் அறிவுரை புகட்டுகிறான். தனது உண்மையான தெய்வீகக் கோட்பாட்டை வழங்கி அதன் மூலம் அவனே போர் புரிவதற்கு நெறிப்படுத்துகிறான்.மகாபாரதம் கதையமைப்பில் கதை என்ற பகுதி தரும் இது.பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களில், அவைகள் ஆறு அத்தியாயங்களாய் மூன்றுபகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பகுதிகளிலும் தத்துவம், இதம், கடமை என விவரித்துள்ளது.மூன்று காரணங்களால் இதை இணையற்று விளங்குகிறது.அவை :"அது உபதேசிக்கப்பட்ட இடம், சந்தர்ப்பம் ""அந்த உபதேசத்தைப் பெற்ற நபரின் தகுதி "" தனி நபரின் முயற்சிக்கு கீதை கொடுக்கும் முக்கியத்துவம் "கீதையின் பிறப்பு, இதனை உபதேசிக்க தேர்தெடுத்த இடம் போர்களம் " போர் செய்யமறுக்கும் அருச்சுனனுக்கு இது உபதேசிக்கப்படதுதான். ஆன்மீக விளக்கங்களும், வாதங்களும் நடைமுறையில் கடைப்பிடிக்க முடியாத, செயலுக்கு ஒத்துவராத வெறும் சொற்களே அல்லது வாதங்களோ அல்ல. அவை வாழ்க்கையோடு பின்னி பிணைந்தவை. ஒவ்வொரு மனிதனும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறி முறைகள்.பகவத் கீதை தர்ம சாஸ்திரமாக மட்டுமே விளங்குகிறது என்ரு பலரும் நினைத்துக்கொண்டு உள்ளனர். இது தவறான கருத்தாகும், எண்ணமாகும். பகவத் கீதை ஆன்மா உயர்வுக்கு காட்டியாக உள்ளது. மனிதன் சகல துக்கங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும், தொல்லைகளிருந்தும் விடுபடும் வழியினை, மார்க்கத்தினை போதிப்பதே, உபதேசிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்." கடவுளை நம்பினோர் கைவிடப்பார் " இதுவே பக்தி.அவனை நம்பியோர் செய்யத்தக்கது எதற்கும் துயர்ப்படாமல், பயப்படாமல் இருத்தல்-எதற்கும் ஐயறவு கொள்ளாதிருத்தல்.
" ஐயமுடையோன் மேன்மையடையான், நம்பியவன் மேன்மையும், மீட்சியும் அடைவான்"மேன்மையும்-மீட்சியும், மோட்சத்தையும் கூறும் பகவத் கீதை பலர் கொலை நூலாகக்கருதுவார். துரியோதனையும், அவனைச் சார்ந்தோரையும் கொல்லும்படி அர்ச்சுனனைத் தூண்டுவதற்கு இந்தப் பதினெட்டு அத்தியாயங்களும் கிருஷ்ணனால் கூறப்படுவதால் அத்தகைய கருத்து நிலவுகிறது.உண்மையில் பகவத் கீதையின் உட்கருத்து ஆன்மாக்களை இறைவனது துணையுடன் காமக் குரோதங்களை நீங்கி ஆன்மீகத்தை அடைய வேண்டும் என்பதே. துரியோதனன் முதலானவர்கள் காமம், குரோதம், சோம்பல், மடமை, அகங்காரம், மறதி, கவலை, துயரம், ஐயம்போன்ற பாவ சிந்தனை உள்ளவர்கள்.அர்சுனன் : ஜீவாத்மா [ஆத்மா]கிருஷ்ணன் : பரமாத்மா.இதுவே கீதையின் உட்கருத்து. இந்த உட்பொருளை அறியாதவர்கள் கீதையை ஒருபோதும் விளங்கிக்கொள்ள மாட்டார்கள்.அதேபோல் , பகவத் கீதை சந்நியாச அல்லது துறவற நூலன்று.வீடு, மனைவி, மக்கள், சுற்றத்தை துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை, துறவற நெறியில்செல்லும்படி கீதை கூறவில்லை. அது கடமையை வலியுறுத்துகிறது." ஒவ்வொருவரும் தங்களுக்கு வாழ்வில் இயல்பாக அமைந்துள்ள கடமைகளைச் சரிவரசெய்வதே வாழ்க்கையின் மிக உயர்ந்த தர்மம் " என்ற கொள்கையை மிக அழுத்தமாக உபதேசிக்கிறது தன்கடமை செய்யாது நிலைகுலைந்து போன அர்ச்சுனனுக்கு அவனது கடமையினை தர்மத்தினை மிகத் தெளிவாக,"அர்ச்சுனா, சத்திரியான நீ உன் கடமையான போரைச் செய் " என கிருஷ்ண பரமாத்மா வலியுறுத்துகிறான்.இது போன்றே நமக்கும் வாழ்க்கைப் போர் உள்ளது. நாம் வாழ்க்கையில் பல தடவைகள்சோம்பலாலும், கோழைத்தனத்தாலும் கடமைகளிலிருந்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்."அர்ச்சுனா எழுந்திரு ! இந்த மனத்தளர்ச்சியை, இந்த பலவீனத்தை ஒழி,எழுந்து நின்று போர் செய்..." என்று கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுன்னுக்குக் கூறும்இவ்வார்த்தை மிகவும் பொருத்தமாக நிறைந்து காணப்படுகிறது. வாழ்க்கை கடமைகளைச்செய்துகொண்டு வாழ்வதற்குரியது ; துறப்பதற்குரியது அன்று என்பது இதன் பொருள்.கீதையில் தனிச்சிறப்புடன் விளக்கும் இன்னொரு கொள்கை " பற்றின்மை "என்பதாகும்." கடமைக்காகவே செய்யப்படும் கடமையே வினைத் தளையைப் போக்கும் "
எல்லா செயல்களையும் கடவுளுக்கு என்று சமர்ப்பித்துவிட்டு பற்றுதல் இன்றி எவன் தொழில் செய்கிறானோ அவன் பக்கம் நான் இருப்பேன். ஒருவனுக்கு பற்றின்மை ஏற்படும்போது அவனுக்கு ஏனையோரின் பொறாமையும், சஞ்சலமும் கொள்ள வழியில்லை.தன் செயலுக்கு இடையூறாக நிற்குமென்ற எண்ணத்தால் அவன் பிற உயிர்களுடன் முரண்படவும் மாட்டான்."சமுதாயத்தின் ஒட்டு மொத்த நலனுக்கா தனிமனிதன்தன்னை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்...."கீதையின் தொனிப்பொருள், சாரம், உட்பொருள் இதுதான். இதன் 18 அத்தியாயங்களில்அமைந்த 700 சுலோங்கங்களும் இதன் விரியுரைகளே. அப்படி அமைய வேண்டிய மனப்பக்குவம் என்ற வகையில் கீதை , " பலனில் பற்று வைக்காத செயல் திறன் " . இது செயலில் துறவு என்பது பற்றிப் பேசுகிறது.இவ்வாறான பற்றின்மை செயல் ஊக்கத்தைப் பாதிக்காலாது என்பதைச் சுட்டுவதற்காக கடமை உணர்வு வற்புறுத்தப்படுகிறது. கடமையில் உணர்ச்சிபூர்வமாகஈடுபடுவதை ' தியானம், பக்தி என்ற அணுகு முறையினை முன் வைக்கிறது,சுட்டிக்காட்டுகிறது." கல்வி கற்றோரிடமும் , சண்டாளாரிடமும் , மிருகத்திடமும் அறிஞர்கள் சமமானபார்வை உடையோர்..." [5-18] என்று கிருஷ்ணன் கூறுகிறான்.கண்ணபிரான் மனிதருள் சாதிவேற்றுமை, அறிவுவேற்றுமை , பிரிவு வேற்றுமை போன்றவைகள் ஏற்படக்கூடாது என்றும், எல்லா உயிர்களூள்ளும் எவ்வித வேற்றுமையும் இல்லை எனக் கூறுகிறார். வேற்றுமை உள்ள இடத்தில் பயமுண்டு, பத்துண்டு, மரணமுண்டு ஏற்றத் தாழ்வு பற்றிய நினைப்புள்ளவர்கள் என்றும் துக்கங்களிலிருந்து விலகமாட்டார்கள். எனவே எல்லா வேற்றுமைகளும் நீங்கி நிற்பதே 'ஆன்ம ' ஈடேற்றத்துக்கு உரிய வழியாகும்.ஆன்ம ஈடேற்றம் அடைய விரும்புவனுக்கு முக்கியமான சாதனம், அவனது சொந்தமனமாகும்."... தன்னைத் தானே வென்றவன் தனக்குத் தானே நண்பன்...""... தன்னைத் தானே ஆளாதவன் தனக்கு தானே பகைவன்...""... ஒருவன் தனக்குத் தானே நண்பன்; தானே தனக்கு பகைவன்...""... உள்ளப் பகையே பகை; புறப்பகை பகையன்று..."இக்கருத்து மனித வாழ்க்கையில் முக்கியமானது.எந்த உயிர் பிராணிக்கும் இம்சை, தொல்லை செய்வோர் உண்மையானஅன்புடையர் அல்ல. உண்மையான பக்தராகமாட்டார்; எந்த ஜீவனையும் கண்டு வெறுப்பு அடைபவர்கள்ஈசனுடைய மெய் அன்பினை பெறமாட்டார்கள். கொல்லாமையே முக்கிய தர்மம் என்பதுகொள்கையாகும்.
பிறருக்கு தீங்கு இழைக்கும் பொருட்டு அவரை வெறுத்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் இருப்பவர்கள் இறுதியில் தாமே அழிந்துவிடுவர் என்று கீதையில் கூறப்படும் கருத்து சிந்திக்கத் தக்கது , எண்ணி செயல்படத்தக்கது.இவ்வாறு சிந்திக்கும் போது கீதை கூறும் வாழ்வியலானது காலம், இடம், சமூகம்,ஆகிய எல்லைகளைக் கடந்தாகவும் பல நிலைப்பட்ட பிரச்சைனைகளுடன் தொடர்புப்படுத்தி அமைந்துள்ளதை காணலாம்.பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கலாச்சாரமுடைய ஒரு காலக் கட்டத்தில் முன் வைக்கப்பட்ட கீதை , வாழ்வியல் நோக்கமானது. காலந்தோறும் பேணப்பட்டு வந்துள்ளமையையும் வெவ்வேறு அடிப்படைகளில் புரிந்து கொள்ளப் பட்டமையையும் வரலாறு உணர்த்தும்.விடுதலைப் போராட்டக் காலத்தில் மகாத்மா காந்தி முதல், வேறு சிலர் பலரும்கீதையின் நோக்கத்துக்கு ஏற்ப அணுகியுள்ளனர் அதனை வழி காட்டியாகவும் கொண்டு பலரும் சிந்தித்து சிறந்துள்ளனர். பாரதியார் முதல் - கண்ணதாசன் வரை சிந்தித்துள்ளனர்.நாமும் சிறிது சிந்திப்போம். முடிந்தவரை செயல்பட முயல்வோம்.நன்றி, வணக்கம்.

எடுத்த‌ காரிய‌ம் த‌டையின்றி ந‌ட‌க்க‌

எடுத்த‌ காரிய‌ம் த‌டையின்றி ந‌ட‌க்க‌:- ஓம் விக்ன‌ நாசின்யை ந‌ம‌ஹ‌
*
நோய்க‌ள் நீங்க‌:-ஓம் ஸர்வவியாதி பிரசமன்யை நமஹ‌
*
கல்வி மேன்மை அடைய‌:-ஓம் ஜ்ஞானாயை நமஹ‌
*
தீராத வழக்குகள் தீர‌:-ஓம் ஸாமரஸ்ய பராயணாயை நமஹ‌
*
உயிர் ஆபத்திலிருந்து மீள:-ஓம் ப்ராணதாதர்யை ந‌ம‌ஹ‌
*
ல‌க்ஷ்மி க‌டாட்ச‌ம் பெற:-ஓம் தன‌தான்ய‌ விவ‌தின்யை ந‌ம‌ஹ‌

ஓம் என்னும் பிரணவம்

எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்தஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது. இந்த ''ஓம் - ஓம்'' என்ற ஒலியையே பிரவணம் என்று கூறுவர். உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும் , பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.ஓம் என்பது பிரணவ மந்திரமாகும்இது அ + உ+ ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது.மனித வடிவமும் அருள் வடிவம்தான்.ஓம் என்ற பிரவணன்"அ" என்பது எட்டும்"உ"என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல் உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது.மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். [உள் மூச்சு வெளி மூச்சு ]" உ ' எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு." ம் ' ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்அத்துடன் " ஓம் " என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும்.அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்: அ என்பது முதல்வனான சிவனையும்உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்தசிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் " ஓ " என பிள்ளையார்சுழியாகவும் , "உ" எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக 'சிவலிங்கமும்' ,ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம், பிரணவம் என்று ஆன்றோர்களும்,சான்றோர்களும்சொல்கிறார்கள்.இதனை திருமூலர், திருமந்திரத்தில் :" ஓமெனு ஓங்காரத் துள்ளே ஒரு மொழிஓமெனு ஓங்காரத் துள்ளே உருவம்ஓமெனு ஓங்காரத் துள்ளே பல பேதம்ஓமெனு ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே "முதல் வரிக்கு ஓம் என்பதை உச்சரிக்கும் பொழுது ஒரே சொல்லாகவும்,இரண்டாம் வரிக்கு அன்னையின் கருவில் பிண்டம் தரிக்கும் பொழுதும்அது தாயின் வயிற்றிற்குள் காணும் காட்சி ஓம் என்றே தோன்றும் ,மூன்றாம் வரிக்கு ஒரே உச்சரிப்பாயினும், மூன்றெழுத்தையும் அதன்விளக்கத்தையும் , பேதங்கள் பலவாறாகவும் , நான்காவது வரிக்கு இதைசதா உச்சரித்து தியானிப்பதால் முக்தி - உயர்ந்த சித்தியும் கிட்டும் என்பதை பாடல் நமக்கு உணர்த்துகிறது.முதல் எழுத்து:"ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்அருவுருவாய் நின்ற பாசிவமுமாகிதோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி "என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.சட்டை முனியும் தனதுசூத்திரத்தில் :" ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சுஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு "- என்றும் குறிப்பிட்டுள்ளார்.சிவன், சக்தி , சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும்முதல் எழுத்தாகவும் இதுவே " அ " உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக்குறிக்குங்கால் , தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , சமஸ்கிருதம்முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து." அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு "என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும் ,அகஸ்த்திய பெருமான் தனது மெய்ஞான சுத்திரத்தில் ," அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி ,- ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி ""அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் "என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்.உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடிஇதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது சூத்திரம் மூலம் விளங்கும்."கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே"- மச்சைமுனி தீட்சை ஞானம் "உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகிவிந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை "- அகஸ்தியர் முதுமொழி ஞானம்.மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு , அல்லது மேல் வாயைத்தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போதுஉண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 - ல்"அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி "என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்காரணமென நன்கு தெளிந்துணரலாம்.ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்துஅகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கிநிற்கும். இதை விளக்கும்படி திருமூலர்," ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் " என்று கூறியுள்ளார்.ஓங்காரத்தி தத்துவம் , அ , உ , ம் எனமித்து ஒலி எழுப்புவது.அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின்தோன்றிக் காத்தல் தொழிலையும் , மகாரவொலி முடிவாதலின் அழித்தற்தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கேஇணைத்து அடக்கி நிற்கும்.
"ஓம்" எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம்செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம்அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும்,உலகையும் மறந்து நிற்க , சாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து,அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும்.இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்"ஓம்" என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால்ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும்.இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில்ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும்தன்மை நீங்களும் காணலாம்.You see, there is no gain without pain.ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம்.ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்படியரு சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.Lateral Thinking போன்றவை எளிதானவைதானே!பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதைஉண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து - சாவில்லாதுஎன்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம்கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.அதிகாலை எழுந்ததும் , இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாதுபத்து நிமிட மணித்துளிகள் ' ஓம் ' என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்கவேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாககாற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிடவேண்டும்.
இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில்குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது ' ஓம் ' என்ற மந்திரத்தை மனதால்நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன்குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும். உள் சுழற்சியால்மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டுடிருப்பதாக சொல்லப்படும் குண்டலிஅல்லது குண்டலினி என்னும் சக்தி எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.[ சித்தர்கள் 'விந்து விட்டவன் நெந்து கெடுவான்]என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயத்தின் மூலம் குண்டலி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம்.]யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைத்தால் பசி, தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம். அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.இதனை திருமூலர் :"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லைகாற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்கூற்றை உதைக்கும் குறியது வாமே " - என்கிறார்.இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப்பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப்புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றிஇறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் எமனைஎதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள்.வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் 'தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்பெறுக' என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை 'காகபுசண்டர்' பாடலைக் காண்போம் :பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்பாலகன் போலொரு வயது தானுமாச்சுநேரப்பா இருபத்தி நான்கு சென்றால்நேர்மையுள்ள வயது மீரண்டாகும்சீரப்பா முப்பத்தி ஆறுமானால்சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போதாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ....ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் - சக்தியும்.உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் - பெண்ணும்சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப - துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சமபங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்உருவமாக சரிபாதி உடல்.