நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்




கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள சிவ  பெருமான் 'நஞ்சுண்டேஸ்வரர் 'என்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி அன்று தான் ,சிவ லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வார்கள் ,ஆனால் இங்கு தினசரி  பூஜையின் போது லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.விஷத்தின் வடிவமான கேசியன் என்ற அசுரனை அழித்த காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும்,அந்த உக்கிரத்தை குறைக்கும் விதமாக இந்த அபிஷேகம் செய்யபடுவதாகவும் சொல்கிறார்கள் .

மேலும் இங்குள்ள இறைவனுக்கு சுக்கு ,வெண்ணெய்,சர்க்கரை ,இவை மூன்றும் கலந்த 'சுகண்டித சர்க்கரை 'என்னும் மருந்தையும் நைவேத்தியம் செய்கிறார்கள் .
சகல நோய்களையும் குணமாக்குபவராக நஞ்சுண்டேஸ்வரர் அருளுவதால் இவருக்கு ''ராஜ வைத்தியர் 'என்ற பெயரும் உண்டு .
அம்பாள் பார்வதி ,இங்கு சிவனுக்கு இடப்புறம் தாட்சாயணியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.இந்த சன்னதியில் வீரபத்திரரும் எழுந்தருளியிருப்பது  விசேஷம் .


இக்கோவிலின் வரலாறு ;
ஒருமுறை தட்சன் ,சிவபெருமானை அவமதித்து யாகம் நடத்தினான் .அப்போது ,தாட்சாயணி (பார்வதி )யாகத்தை நிறுத்த சென்றாள்.
அங்கு தட்சன் அவளை அவமதிக்கவே யாகத்தை நிறுத்துவதற்காக யாக குண்டத்தில் வீழ்ந்தாள்.அந்நேரத்தில் சிவபெருமான்,தனது உக்கிரத்தில் இருந்து வீரபத்திரரை உருவாக்கி யாகத்தை அழிக்க அனுப்பினார்.
அவர் தட்சன் மேற்கொண்ட யாகத்தை அழித்ததோடு,அவனது தலையையும் கொய்தார்,மேலும் உக்கிரம் குறையாத வீரபத்திரர் ,யாகத்தில் விழுந்த தாட்சாயணியை தோளில் தூக்கி கொண்டு நடனமாடினார் ,அந்த வேளையில் தட்சன் மனைவி பிரசுத்தாதேவி ,
சிவ பெருமானிடம் வந்து முறையிட்டாள்.
தவறு செய்த கணவரையும் ,மகள் தாட்சாயணியையும் உயிர்ப்பித்து அருளும் படி வேண்டினாள்.
அவளது வேண்டுகோளை ஏற்ற சிவன் தட்சணையும், தாட்சாயணியையும் உயிர்ப்பித்தார்.தட்சன்,பிரசுத்தாதேவி இருவருக்கும் தாட்சாயணியுடன் சேர்ந்து காட்சிதந்தார். 


இந்த நிகழ்வின் அடிப்படையிலே இந்த தலத்தில் வீரபத்திரர் ,தாட்சாயணியுடன் அருள் பாலிக்கிறார்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்குள்ள இறைவனுக்கு பஞ்சாமிர்த்தம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள் .வில்வ இலை மற்றும் வெற்றிலையால் மாலை செய்து அணிவித்து ,தயிர் சாதம் படைத்து வழி படுவோரையும் காண முடிகிறது .
முன்வினை பாவம் ,தெரியாமல் செய்த பாவம் ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் நிவர்த்தியாகிறது என்கிறார்கள் .
முக்கியமாக ,விஷக்கடியால் பாதிக்கபட்டவர்கள்,தீராத வியாதியால் அவதிபடுபவர்கள் இங்கு வேண்டி கொள்ள ,அவர்கள் விரையில் குணமடைவதாகவும் கூறுகின்றனர் .