கோவிலில் செய்ய கூடாதவை

1.கர்ப்ப கிரஹத்தின் கடவுளுக்கு அலங்காரம் நடக்கும்போது திரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது.

2.சுவாமிக்கும் பலி பீடத்திற்கும் குறுக்கே செல்லக்கூடாது.

3.பலிபீடம், விக்ரஹம் ஆகியவற்றின் நிழலை மிதித்தல் கூடாது.

4.ஆலயத்தில் நண்பர்களையோ பெரிய மனிதர்களையோ கண்டால் வணங்க கூடாது. இறைவனே மிகப் பெரியவன். அத்தகைய ஆலயத்தில் அனைவரும் சமம்.

5.விபூதி, குங்குமம், பிரசாதம் வாங்கி நெற்றியில் இட்டுக் கொண்டபின் மீதமானவற்றை கீழே கொட்டுதல் சுற்றுத் தூண்களில் தடவுதல், கொட்டுதல் கூடாது. மீதமானவற்றை ஒரு தாளில் மடித்துச் சென்று வீட்டின் பூஜையறையில் வைத்துக் கொண்டு தினசரி இட்டுக் கொள்ளலாம்.

6.பிரசாதங்களை ஒருவருக்கொருவர் இட்டுக் கொள்ளுதலும் கூடாது.

7.கோவிலுக்குள்ளேயோ, கோவில் மதிற்புறங்களிலோ எச்சில் துப்புதல், மலம், ஜலம் கழித்தல் கூடவே கூடாது.

8.விபூதி, சந்தன அபிஷேகம், பால் அபிஷேகம் தவிர சுவாமிக்கு இதர திருமஞ்சனம் ஆகும்போது பார்க்க கூடாது.

9.கோவிலில் உள்ள திருவிளக்குகளை கையால் தூண்டவோ தூண்டிய கையை சுவரில் துடைக்கவோ கூடாது. மீதியிருக்கும் எண்ணையை தலையில் தடவிக் கொள்ள கூடாது.

10.சுவாமிகளை தொடுவது, சுவாமிகளின் திருவடிக்கடியில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.

11.சட்டை அணிந்து செல்வதை தவிர்ப்பது நல்லது. லுங்கி அணிந்து செல்லுதல் கூடாது. அதிக அழுத்தமான வண்ண உடை ஆடம்பரமான உடை அணிந்து செல்லக் கூடாது. இது மற்றோரின் கவனத்தை திசை திருப்பிவிடும். எளிமையான கதர் துணிகளை அணிந்து செல்லுதல் கூடாது.

12. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது. அடிமேல் அடி வைத்து வலம் வரவேண்டும். மிக நிதானமாக அனைத்து மூர்த்திகளையும் வணங்கிச் செல்ல வேண்டும்.

13. எவருடனும் உலக விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பேசிக்கொண்டு கோவில்களில் வலம் வரக்கூடாது. ஆலயத்தினுள் தெய்வசக்தி நிரம்பியிருக்கும். அச்சக்தி நம் உடலில் ஊடுருவும்படி இறைவனையே மனம் முடிக்க நிரம்பி வலம் வருதல் வேண்டும்.

14. போதை வஸ்துக்கள், திண்பண்டங்கள் வாயில் வைத்துக் கொண்டு ஆலயத்தினுள் பிரவேசிக்ககூடவே கூடாது.
 

நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்




கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள நஞ்சன்கூடு என்ற ஊரில் கோவில் கொண்டுள்ள சிவ  பெருமான் 'நஞ்சுண்டேஸ்வரர் 'என்று அழைக்கப்படுகிறார்.

பொதுவாக சிவன் கோவில்களில் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி அன்று தான் ,சிவ லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வார்கள் ,ஆனால் இங்கு தினசரி  பூஜையின் போது லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.விஷத்தின் வடிவமான கேசியன் என்ற அசுரனை அழித்த காரணத்தால் சிவபெருமான் இங்கு உக்கிரமாக இருப்பதாகவும்,அந்த உக்கிரத்தை குறைக்கும் விதமாக இந்த அபிஷேகம் செய்யபடுவதாகவும் சொல்கிறார்கள் .

மேலும் இங்குள்ள இறைவனுக்கு சுக்கு ,வெண்ணெய்,சர்க்கரை ,இவை மூன்றும் கலந்த 'சுகண்டித சர்க்கரை 'என்னும் மருந்தையும் நைவேத்தியம் செய்கிறார்கள் .
சகல நோய்களையும் குணமாக்குபவராக நஞ்சுண்டேஸ்வரர் அருளுவதால் இவருக்கு ''ராஜ வைத்தியர் 'என்ற பெயரும் உண்டு .
அம்பாள் பார்வதி ,இங்கு சிவனுக்கு இடப்புறம் தாட்சாயணியாக தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.இந்த சன்னதியில் வீரபத்திரரும் எழுந்தருளியிருப்பது  விசேஷம் .


இக்கோவிலின் வரலாறு ;
ஒருமுறை தட்சன் ,சிவபெருமானை அவமதித்து யாகம் நடத்தினான் .அப்போது ,தாட்சாயணி (பார்வதி )யாகத்தை நிறுத்த சென்றாள்.
அங்கு தட்சன் அவளை அவமதிக்கவே யாகத்தை நிறுத்துவதற்காக யாக குண்டத்தில் வீழ்ந்தாள்.அந்நேரத்தில் சிவபெருமான்,தனது உக்கிரத்தில் இருந்து வீரபத்திரரை உருவாக்கி யாகத்தை அழிக்க அனுப்பினார்.
அவர் தட்சன் மேற்கொண்ட யாகத்தை அழித்ததோடு,அவனது தலையையும் கொய்தார்,மேலும் உக்கிரம் குறையாத வீரபத்திரர் ,யாகத்தில் விழுந்த தாட்சாயணியை தோளில் தூக்கி கொண்டு நடனமாடினார் ,அந்த வேளையில் தட்சன் மனைவி பிரசுத்தாதேவி ,
சிவ பெருமானிடம் வந்து முறையிட்டாள்.
தவறு செய்த கணவரையும் ,மகள் தாட்சாயணியையும் உயிர்ப்பித்து அருளும் படி வேண்டினாள்.
அவளது வேண்டுகோளை ஏற்ற சிவன் தட்சணையும், தாட்சாயணியையும் உயிர்ப்பித்தார்.தட்சன்,பிரசுத்தாதேவி இருவருக்கும் தாட்சாயணியுடன் சேர்ந்து காட்சிதந்தார். 


இந்த நிகழ்வின் அடிப்படையிலே இந்த தலத்தில் வீரபத்திரர் ,தாட்சாயணியுடன் அருள் பாலிக்கிறார்.
வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்குள்ள இறைவனுக்கு பஞ்சாமிர்த்தம் மற்றும் அன்னத்தால் அபிஷேகம் செய்கிறார்கள் .வில்வ இலை மற்றும் வெற்றிலையால் மாலை செய்து அணிவித்து ,தயிர் சாதம் படைத்து வழி படுவோரையும் காண முடிகிறது .
முன்வினை பாவம் ,தெரியாமல் செய்த பாவம் ஆகியவை இத்தலத்து இறைவனை வழிபடுவதன் மூலம் நிவர்த்தியாகிறது என்கிறார்கள் .
முக்கியமாக ,விஷக்கடியால் பாதிக்கபட்டவர்கள்,தீராத வியாதியால் அவதிபடுபவர்கள் இங்கு வேண்டி கொள்ள ,அவர்கள் விரையில் குணமடைவதாகவும் கூறுகின்றனர் .

இறை வாகனங்கள்


எம்பெருமான் ஈசனுக்கு வாகனமாக இருப்பது ரிஷபம் என்று சொல்லக் கூடிய நந்தி வடிவம் என்பது வேதங்களே, அந்த உருவம் என்பது இதை நாம் சிந்தித்தால் நம்மோடு வாழ்க்கையில் ஒன்றி போன சில விசயங்கள் புரியும். நமது முன் காலத்தில் உதவி அதற்கு நன்றி சொல்ல ஒரு பண்டிகை விநாயகர் ஒரு பெரிய உருவம் அவருக்கு வாகனம் முஞ்சூறு, என்னடா சின்ன உருவம் பெரிய உருவத்தை எப்படி சுமந்து செல்லும் என்று நினைப்பார்கள். ஆனால் அணிமா, லகிமா போன்ற நிலை தெரிந்தால் இது எளிது உருவத்தை எடை இல்லாத நிலையாக்கினால் இது சாத்தியமே. இந்த தத்திவத்தை நாம் உணர வேண்டும். இது போல் அன்னபறவை பிரம்மா, சரஸ்வதி ஆகிய கடவுள்களுக்கு இதை நம் முன்னோர்கள் கல்விக்கு அதிபதி என்று சொன்னார்கள்.

நமக்கு அறிவு செயல்பட வேண்டும் என்றால் கல்வி ஒன்றுதான் நமக்கு நல்ல கெட்ட விஷய ஞானங்களை உணர்த்திடும். அதுபோல அன்னப்பறவை பாலையும், தண்ணீரையும் தனித்தனியாக பிரிக்கும் என்று நாம் பள்ளியில் படித்திருப்போம். அதுபோல் காவல் தெய்வங்களுக்கு குதிரை இன்று எல்லா எந்திரங்களாம். குதிரை சக்தி தான் குறிப்பிடபடுகிறது (சக்தி) ஏன் என்றால் காவல் தெய்வத்திற்கு வேகம் தேவை இது போல் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லி கொண்டே போகலாம் சிந்தை செய்தால் பல விஷயங்கள் புரியும் இந்த திருக்குறளை முழுமையாக கற்று தெளிந்தாலே நமக்கு பல விஷயம் புரியும்.

நவக்கிரக கோவில்கள்


பொதுவாக நவக்கிரகங்களுக்கு, ஆலயங்களில் சந்நிதி இருந்தாலும் நவக்கிரங்களுக்கென்று தனித்தனியே அமைந்துள்ள கோவில்களுக்குச் சென்று அந்தந்தக் கிரகங்களை வழிபடுவது தான் தனிச்சிறப்புடையது. இந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் நவக்கிரங்களுக்கும் தனித்தனியே அமைந்துள்ள கோவில்கள் அமைந்துள்ளன.

நவகிரகங்களுக்கு ஜாதகரீதியாக பரிகாரம் மற்றும் வழிபாடு செய்வதாக இருந்தால் குறிப்பிட்ட அந்த கோவிலுக்கு மட்டும் தான் செல்ல வேண்டும். கும்பகோணம் அல்லது மாயவரம் எனப்படும. மயிலாடதுறையை மையமாக வைத்தால் இந்த ஒன்பது கோவில்களுக்கும் சென்று வருவது எளிதாகும்.
வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்) மாயவரத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மூல தெய்வம் ஸ்ரீ வைத்தியனாத சுவாமி. இது செவ்வாய் கிரகத்துக்கு உரிய தலம். இதன் பழைய பெயர் புள்ளிருக்கு வேளூர். ஜடாயு இங்கே வீழ்ந்தாக வரலாறு உண்டு. இன்றும் ஜடாயு குண்டம் கோவிலில் உள்ளது. வேத காலத்தைச் சேர்ந்த மரம் ஒன்றும் இங்கே உள்ளது.

சூரியனார் கோவில் (சூரியன்) கஞ்சனூரை அடுத்த இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்த தலம் அமைந்துள்ளது. சூரிய தேவன் உஷாராணியுடன் வீற்றிருக்கும் புகழ் பெற்ற தலம் இது. முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்னும் முனிவர் தனக்கு குஷ்ட நோய் வரவிருப்பதை உணர்ந்து, நன்மை தீமைகளை ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது நவக்கிரகங்களே, என்பதால் நவக்கிரகங்களைக் குறித்துக் கடும் தவம் மேற்கொண்டார்.தவத்திற்கு இரங்கி நவ கிரகங்களும் முனிவர் முன் தோன்ற முனிவர் தன் குறையைக் கூறி தொழு நோய் வராமல் காக்க வேண்டினார். விதியின் பயனை மாற்றும் வல்லமை தமக்கு இல்லை என்று நவக்கிரகங்கள் கூறவே கோபமுற்ற முனிவர் எனக்கு வரவிருக்கும் தொழு நோய் உங்களைப் பீடிக்கட்டும் என்று சாபமிட்டார். நவ கிரகங்கள் தொழு நோயால் பீடிக்கப்படவே பரமேஸ்வரனை நோக்கி வழிபட்டன. வானில் ஒரு அசரீரி தோன்றி நீங்கள் திருமங்கலக்குடி சென்று ஸ்ரீ பிரணவ நாதேஸ்வரரை நோக்கி தவம் இருங்கள். அருள் கிடைக்கும் என்று கூறியது. அதன் படியே நவக்கிரகங்கள் வெள்ளை எருக்கன் வனத்தில் தவம் இருக்க ஸ்ரீ பிரணவ நாதேஸ்வரர் அவர்களுக்குக் காட்சி கொடுத்து சாப நிவர்த்தி செய்ததோடு இங்கிருந்தே அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாலியுங்கள் என்று வரம் அளித்ததார். இங்கு வரும் பக்தர்கள் முதலில் ஸ்ரீ பிரணவ நாதேஸ்வரரை முதலில் வழிபடுவது மரபு. இங்கே ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித் தனியே கோவில்கள் உள்ளன. குரு, சூரிய பகவானை வணங்குவதை இங்கே பார்க்கலாம்!

கஞ்சனூர் (சுக்கிரன்) மாயவரத்திலிருந்து திருவையாறு செல்லும் பதையில் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. திருமணம் மற்றும் பண வரவிற்க்கு சுக்கிரனின் அருள் மிகமுக்கியம், கஞ்சனூர் சுக்கிரனுக்குரிய தலம்.

திங்களூர் (சந்திரன்) சூரியனார் கோவிலிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் திருவையாற்றுக்கு 4 கிலோமீட்டர் முன்னதாக அமைந்திருக்கும் திருத்தலம் இது சந்திரனுக்குரிய தலம் இது. வாகன வசதிகளை ஏற்படுத்திக் கொண்டு இங்கே செல்வது நலம்.

ஆலங்குடி (குரு) கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியே ஆலங்குடி செல்லலாம். கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் நீடாமங்களம் அருகில் அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்தியாக குரு பகவான் இருந்து அருள் பாலிக்கும் அற்புதக் கோவில் இது. குருப் பெயர்ச்சி சிறப்பாக இங்கே நடைபெறும்.

திருவெண்காடு (புதன்) மேலப் பெரும்பள்ளத்திற்க்கு அருகில் அமைந்துள்ள தலம். சீர்காழியிலிருந்து 15 கிலோ மீட்டர் துரத்தில் உள்ளது. புதனுக்கு உரியது நான்கு புறமும் ராஜ கோபுரங்களை உடையதும் பரப்பளவில் பெரிதானதுமான கோவில் இங்குள்ளது. மூன்று குளங்கள் கோவில் முன்பாக உள்ளன. புத்திக்கு நாயகனான புதனுக்குரிய இந்த தலத்தில் புதனுக்கு பயறு தானியத்தின் மீது விளக்கேற்றினால் புத்தி தெளிவடையும். கல்வி உயரும், நரம்புத்தளர்ச்சி முதலான வியாதிகள் தீரும்.அந்தந்தக் கோவில்களில் அந்தந்த கிரகங்களுக்கு உரித்தான பூஜை முறைகளைச் செய்து அருள் பெறலாம்.

திருநள்ளாறு (சனி) திரு நாகேஸ்வரத்திலிருந்து பேரளம், அம்பகரத்தூர் வழியே திரி நள்ளாறைச் சென்று அடையலாம். காரைக்காலிலிருந்து 5 கிலோமிட்டர் தொலைவில் உள்ளது. நிடத நாட்டு மன்னனான நளன் சனீஸ்வரனின் பார்வை பட்டதால் தன் நாட்டை இழந்து, மனைவியையும், குழந்தைகளையும் பிரிந்தான். கானகத்தில் கார்க்கோடகன் என்றபாம்பு தீண்ட தன் அழகிய உருவையும் இழந்து அயோத்தி மன்னனிடம் தேரோட்டியாக பணி புரியும் நிலையை அடைந்தார். பிறகு சனீஸ்வரனை மனம் உருகி வழிபட்டு சனீஸ்வரனின் அருளால் தன் நாட்டை மிண்டும் அடைந்தார். மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்தார், என்றாலும் எப்போதும் சித்த பிரமை பிடித்தது போல அவர் இருக்கவே, நாரத முனிவர் அவனிடம் தீர்த்த யாத்திரை செல்லுமாறு கூறினார். அதன் படியே பல புண்ணிய தலம் சென்று வழிபட்டு கடைசியில் தர்ப்பாரண்யம் என்ற தலத்தை அடைந்து அங்கு எழுந்தருளி உள்ள தர்ப்பாரண்யெஸ்வரர் என்ற ஈஸ்வரனை வணங்கியதும் சனி அவனை விட்டு முற்றிலுமாக நீங்கினார். அங்கே ஒரு தீர்த்தத்தை உருவாக்கி அதற்க்கு நள தீர்த்தம் என்று பெயரிட்டு இறைவனுக்கு வைகாசி மாதம் புனர் பூச நட்சத்திர நாளில் விழா நடத்தி முக்தி பெற்றார். இந்த தலமே இன்று திருநள்ளாறு என்று அழைக்கப்படுகிறது. திரு ஞானசம்பந்தர் பதிகம் பாடிய தலம் இது. இங்குள்ள நள தீர்த்தம் தனிச் சிறப்பு பெற்றது. நள்ளிரவு வரை இங்கு தீர்த்தமாடி தோஷ நிவர்த்தியை பக்தர்கள் பெறுகிறனர். ஈஸ்வரன் தனக்கு நிகரான பெருமையை இங்கு சனீஸ்வரனுக்கு அளித்திருக்கிறார். சனிக்கிழமை சிறப்பு வழிபாட்டு தினம். பகவானுக்கு உகந்த எள்ளு பொட்டலத்தைச் சமர்ப்பித்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வைத்தால் சனி பகவானின் அருள் கிடைக்கும். இங்கு சனிப் பெயர்ச்சி பெரிய திருவிழாவாக நடை பெறுகிறது.
திரு நாகேஸ்வரம் (ராகு) கும்பகோணத்திற்கு அருகில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இது. இந்த கோவிலில் ராகுவிற்கு பாலபிஷேகம் செய்து விட்டு மேலப் பெரும்பள்ளத்தில் உள்ள கேதுவிற்கு அர்ச்சனை செய்தால் தோஷங்களை விலகும். ராகு பகவானுக்கு ராகு கால வேளையில் அபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்றாகும். நாட்டில் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்து தினமும் ராகு கால வேளைகளில் சிறப்பான அபிஷேகம் செய்கின்றனர். ராகு பகவானுக்கு பால் அபிஷேகம் செய்யும்போது சுவாமியின் மேல் அபிஷேகம் செய்யும் பால் நீல நிறமாக மாறும். அந்த பால் ராகுவின் மேனியில் நீல நிறமாக வழிந்து பாதத்தை அடைந்து தூய வெண்மை நிறமாக மாறி தரையில் ஓடுகிறது. நாக நாத சுவாமி கோவிலில் வெளி பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இரு தேவியர்களுடன் கோயில் கொண்டு ஏழுந்தருளியுள்ளார். சிறந்த சிவ பக்தரான ராகு, காலஹஸ்தி, திருக்களர், ரமேஸ்வரம் ஆகிய இடங்களிலும் மேன்மை பெற்று விளங்கிய போதிலும் இந்த தலத்தில் மட்டுமே தன் இரு தேவியருடன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்யும் போதுவெல்லமும், அரிசியும் கலந்து காப்பரிசி நிவேதனம் செய்து விட்டு அதை சன்னிதியில் வைத்து பூட்டிவிட்டுச் சென்று விடுவார்கள். மறு நாள் வைத்து பார்த்தால் அந்த அரிசி இருக்காது. அதை நாகம் வந்து தின்றுவிடும் என்பர். இந்த தலத்திற்கு உரிய விருட்சம் செண்பக மரம். இங்கே 12 தீர்த்தங்கள் உள்ளன.
மேலப்பெரும்பள்ளம் (கேது) காரைக்கால் தரங்கம்பாடி வழியே பூம்புகார் செல்லும் வழியில் மேலையூருக்கு அருகில் அமைந்துள்ள கிராமம். மேலப்பெரும்பள்ளம் இது கேதுவிற்கு உரிய தலம்.

அண்ணாமலை அதிசயங்கள் அண்ணாமலை அதிசயங்கள்

அண்ணாமலை. நெருப்பு மலை, அக்னி மலை, அருணாசலம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இம்மலை, நினைக்க முக்தி தரும் மலை’ என்று போற்றப்படுகிறது. இம்மலையில் பல்வேறு அதிசயங்களும் உள்ளன.
இது பற்றி பகவான் ரமணர் அவ்வப்போது தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். பக்தர்கள் சிலருக்கும் இவ்வகை அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
‘இங்குள்ள மலையில் கௌரீ வனம் என்ற ஒரு வனம் உண்டு. பார்வதி தேவி தவம் செய்த அப்பகுதிக்குச் செல்பவர் தம் வசமிழந்து விடுவர். அங்கே செல்பவர்கள் தங்கள் வந்த பாதையையும், நோக்கத்தையும் மறந்து, வந்த வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்க நேரிடும்’ என்கிறது தல புராணம். ஹம்ப்ரீஸ் போன்ற ரமண பக்தர்கள் சிலருக்கு இவ்வகை அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. வழி தெரியாமல் சுற்றித் திரிந்து களைத்து, இறுதியில் ஒரு விறகு வெட்டியின் மூலம் சரியான பாதையைக் கண்டு அவர்கள் ஆசிரமம் திரும்பியிருக்கிறார்கள்.
”வேண்டியதை வேண்டியவாறு தருகின்ற ஒரு வகுள விருக்ஷம் அண்ணாமலையின் நடுவே உள்ளது. இதில் வாமதேவர் எப்போதும் மோன நிஷ்டையில் ஆழ்ந்திருக்கிறார்” என்கிறது தல புராணம்.
அண்ணாமலையின் வட சிகரத்தில் ஒரு மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. அங்கே அருணாசல யோகியாக, அருணகிரிச் சித்தராக ஸ்ரீ அண்ணாமலையாரே தவம் செய்து கொண்டிருக்கிறார். இவ்வாறு இறைவனை நோக்கி இறைவனே தவம் செய்யும் ஒரே தலம் உலகில் அண்ணாமலை ஒன்று தான். பகவான் ரமணர் இந்த மரத்தைக் காண ஒருமுறை சென்று குளவி கொட்டியதால் அல்லலுற்றுத் திரும்பி விட்டார். யாராலும் காண முடியாத ஓரிடத்தில் இந்த விருட்சம் அமைந்திருக்கிறதாம். அங்கே பல சித்தாதி யோகியர்கள், முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பர் என்கிறார் ரமணர்.
ஆமைப் பாறை, வழுக்குப் பாறை, மயிலாடும் பாறை போன்றவை காணத் தகுந்தவை. மலையின் மேல் பல ரகசிய குகைகள் உள்ளன. அவற்றில் அரூப நிலையில் சித்தர்கள் தவமியற்றி வருகின்றனர். பிராப்தம் உள்ளவர்களுக்கு அவர்களது காட்சி பல்வேறு வடிவில் கிடைத்திருக்கிறது.
இது தவிர இன்னும் பல அற்புதங்களைத் தன்னகத்தே கொண்ட அதிசய மலை அண்ணாமலை. அங்கு எடுத்த படங்கள் சில கீழே…

ராஜகோபுரம்

இரவில் கோபுரம்

விஸ்வரூப சிவன்

அண்ணாமலையார்

அண்ணாமலையார் பாதம்

குகை நமசிவாயர் ஆலயம்

விரூபாக்ஷி குகை

மேலிருந்து...

அடி அண்ணாமலையில் இருந்து...

நந்தி - கிரிவலப் பாதை

அடிமுடி ஜீவசித்தர் சமாதி

பகவான் ரமணர் சமாதி - ரமணாச்ரமம்

சித்திரக்கவி

பாதாள லிங்கம் அருகே...

அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசலா
ஓம் அருணாசலேஸ்வராய நமஹ!

கடன் தொகை - மைத்ர முகூர்த்தங்கள்


நந்தன வருடத்தின்(14.4.12 முதல் 13.4.13 வரை) மைத்ர முகூர்த்தங்கள்


நாம் வாங்கியிருக்கும் கடன் தொகை எவ்வ்வ்வளவு பெரியதாக இருந்தாலும்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ,நாம் வாங்கியிருக்கும் கடனில் அசலில் ஒருபகுதியைத் திருப்பித் தர வேண்டும்.அவ்வாறு திருப்பித்தந்தால்,அதன்பிறகு,அந்த கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும்,விரைவாக தீர்ந்துவிடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் மைத்ரமுகூர்த்தப்பட்டியலை வெளியிட்டுவருகிறோம்;ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் இந்த மைத்ர முகூர்த்த நேரப்பட்டியலைப் பயன்படுத்தி,தங்களது கடன்களைத் தீர்த்துவிட்டனர்.இந்த மைத்ர முகூர்த்தப்பட்டியலை கந்துவட்டிக்குப் பயன்படுத்தி,கடனைத் தீர்க்க முடியாது.
பாலன் என்பவர்,சுகுமாரிடம் ரூ.1,00,000/- கடன் வாங்கியிருக்கிறார்.கி.பி.2002 இல் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்;பாலன் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மைத்ரமுகூர்த்த நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து,ரூ.500/- அல்லது ரூ.1000/-ஐ சுகுமாரிடம் கொடுக்க வேண்டும்.இதை அசலில் வரவு வைத்துக்கொள்ளுங்கள்;மீதிக் கடனை விரைவில் அடைத்துவிடுகிறேன் என்ற அர்த்தம் வருமாறு சொல்ல வேண்டும்.சுகுமார் அதை அசலில் வரவு வைக்க வேண்டும்.அவ்வளவுதான்.இப்படி ஒரே ஒருமுறை செய்தாலே,மீதி ரூ.99,500/- அல்லது ரூ.99,000/-கடனை பாலனால் தீர்த்துவிடமுடியும்.இதேபோல,வங்கிக்கடனுக்கும் முயற்சி செய்துபார்க்கலாம்;ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கடன்கள் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்.
கடன் என்பது சிலருக்கு கவனக்குறைவால் ஏற்படும் சுமை;பலருக்கு ஆடம்பரத்தால் உருவாகும் சுருக்குக் கயிறு;எப்படிப் பார்த்தாலும் கடன் என்பது அவரவரின் கர்மவினையின்  விளைவுதான்.இருப்பினும்  இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்தி விரைவாக கடனைத் தீர்ப்பதும்,அவரவர்களின் பூர்வபுண்ணியமே!!! சிலருக்கு அவர்களின் பிறந்த ஜாதகப்படி,வாழ்நாள் முழுக்க கடன் இருக்க வேண்டும்.அப்பேர்ப்பட்ட நேரத்தில் பிறந்திருப்பார்கள்;அவர்கள் ஒரு கடனை அடைத்துவிட்டு,அடுத்த கடனை வாங்கிட வேண்டியதுதான்.அப்பேர்ப்பட்ட ஆத்மாக்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

26.2.12 ஞாயிறு காலை 9 முதல் 11 மணிவரை;

27.2.12 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை;

13.3.12 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை;

25.3.12 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை;

9.4.12 திங்கள்  இரவு 8.30 முதல் 10.30பத்து முப்பது வரை;

20.4.12 வெள்ளி இரவு 7.35 முதல் 9.35 வரை;

7.5.12 திங்கள் மாலை 6.30 முதல் 8.30 வரை;

18.5.12 வெள்ளி காலை 4.05 முதல் 6.05 வரை;

3.6.12 ஞாயிறு மாலை 4.44 முதல் 6.44 வரை;

14.6.12 வியாழன் காலை 5.49 முதல் 6.49 வரை;

15.6.12 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை;

30.6.12 சனி மாலை 3.35 முதல் 4.50 வரை;

7.8.12 செவ்வாய் இரவு 10.35 முதல் 12.35 வரை;

8.8.12 புதன் இரவு 10.40 முதல் 11.50 வரை;

24.8.12 வெள்ளி மதியம் 12.30 முதல் 2.30 வரை;

4.9.12 செவ்வாய் இரவு 8.50 முதல் 10.50 வரை;

21.9.12 வெள்ளி காலை 10.15 முதல் மதியம் 12.15 வரை;

1.10.12 திங்கள் இரவு 7.07 முதல் 9.07 வரை;

29.10.12 திங்கள் மாலை 5.19 முதல் இரவு 7.19 வரை;

14.11.12 புதன் காலை 7.45 முதல் 8.15 வரை;

15.11.12 வியாழன் காலை 6.05 முதல் 6.15 வரை;

25.11.12 ஞாயிறு மாலை 4.40 முதல் 6.40 வரை;

12.12.12 புதன் விடிகாலை 4.35 முதல் 6.30 வரை;

23.12.12 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை;

19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் 12.41 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;


இந்த மைத்ர முகூர்த்த நேரங்களின் மைய பாகத்தைப் பயன்படுத்துதல் நன்று;இந்த மைத்ர முகூர்த்த நேரமானது இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,கர்னாடகா,லட்சத்தீவு பகுதிகளுக்கும்; இலங்கை,மாலத்தீவு முழுமைக்கும் பொருந்தும். பிற நாடுகளில் இருப்போர் இந்திய நேரத்துக்கும்,அவர்கள் வாழும் நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொண்டு பயன்படுத்தலாம்.கடனில்லாமல் வாழ வாழ்த்துகிறேன்.

ஓம்சிவசிவஓம்

ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைகள்





பணக்காரன் வீட்டு வேலைக்காரி அந்த வீட்டின் வேலைகளை செய்தாலும், அவளுடைய சிந்தனையெல்லாம் தன் வீட்டின் மீதே இருக்கும். எஜமானனின் குழந்தைகளை எல்லாம் தன் குழந்தையாகப் பாவித்தாலும், அக்குழந்தைகள் தனக்கு சொந்தமானவர்கள் அல்ல என்பதை அவள் உள்மனம் நன்கு அறிந்திருக்கும். அதுபோல, உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவன் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.
* மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல், பக்தியாகிய ஞானத்தை கடைந்தெடுத்தால் உலகமாகிய நீரில் மிதக்கலாம். உலகத்துடன் கலக்காமல் தனித்து நிற்கும் வலிமை உண்டாகும்.
* தெரிந்து சொன்னாலும், தெரியாமல் சொன்னாலும், தன்னறிவில் சொன்னாலும், அறியாமல் சொன்னாலும், எந்த நிலையில் சொன்னாலும் பகவான் நாமத்தைச் சொன்னதற்கான பலன் ஒருவனுக்கு நிச்சயம் உண்டு. அப்படி சொல்லும்போது மலையளவு பாவங்கள் குவிந்திருந்தாலும், பஞ்சுப்பொதி மீதிட்ட நெருப்பினை போல் எரிந்து சாம்பலாகி விடுm


மனிதர்கள் பெண்ணாசையும், பணத்தாசையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணமே தீராத நோயாக அவர்களைப் பீடித்திருக்கிறது. இதிலிருந்து விடுபட நல்லவர்களோடு பழகுவது தான் சரியான தீர்வு.
* சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும். அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல, எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்குள் ஆன்மிக விஷயம் எதுவும் உள்ளே போகாது.
* மக்களுள் பெரும்பாலோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடுதல் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் யாவும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டவை.
* பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பவர்கள் தங்களுடைய செல்வத்தை சுயநலத்தால் தனக்காகவே வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கஷ்டப்படுகிற ஜனங்களுக்கு உதவி புரிய வேண்டும்.
* மீன்கொத்திப்பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திருங்கள். அது நீருக்குள் மூழ்குகின்ற போது, சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கும் .வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் அந்த நீரும் அகன்றுவிடும். அதுபோல உலகியலில் ஈடுபட்டாலும் பற்றற்று இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
-ராமகிருஷ்ணர் 

மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலயம்


தென்னாங்கூரிலிருந்து நாங்கள் சென்றது மேல் மலையனூர் அங்காளம்மன் ஆலயம். வழியில் சில சமண ஆலயங்கள் வயல்களுக்கு நடுவே கண்களில் பட்டன. ஆனால் இறங்கிச் சென்று தான் பார்க்கவேண்டும். அதற்குக் குழுவினர் அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமே. எல்லாமே பழைய ஆலயங்கள் எனப் பார்த்த மாத்திரத்தில் புரிந்தது. இன்னொரு சமயம் வாய்க்கவேண்டும். சமண ஆலயங்கள் பற்றிக்குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு செல்லவேண்டும். ராஜஸ்தான், குஜராத்தில் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பார்த்ததில்லை. இனி அங்காளம்மனின் வரலாறு. சக்திபீடம் என்றும், உலகின் சிருஷ்டி முதன்முதல் இங்கே தான் ஆரம்பித்தது என்றும் இவள் ஆதிபராசக்தி என்றும் கூறுகின்றனர்.


அம்மன் ஆதிபராசக்தி ஆவாள். சதுர்யுகங்களுக்கும் முன்னால் இருந்த சிருஷ்டியின் ஆரம்பமான மணியுகத்திற்கும் முன்னரே சுயம்புவாய்த் தோன்றிய அன்னை, அந்த யுகத்தின் முதல் மூர்த்தியான சிவனின் பிரமஹத்தி தோஷத்தை நீக்கினாள் என்று சொல்லப் படுகிறது. அருள் மிகு அங்காளம்மன் முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் தன்னிடம் கொண்டவளாக முப்பெருந்தேவியரின் அம்சமும் கொண்டவளாக, மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மாபெரும் ஆதி பராசக்தியாக முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்தவளாகவும், காணப்படுகிறாள்.

முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய இவள் தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுகதத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவானவள் அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்.

தாக்ஷாயணி அவதாரத்தில் தக்ஷனின் யாக குண்டத்தில் விழுந்து உயிரை விடத் துணிந்த சக்தியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்த ஈசனின் துயரத்தைக் கண்டு சகிக்கமாட்டாமல் மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவள் உடலைத் துண்டு துண்டுகளாக அறுந்து விழும்படிச் செய்தார். அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர். இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.

அம்பிகையின் உடலைத் தூக்கிக்கொண்டு சிவன் தாண்டவம் ஆடியபோது அறுந்து துண்டாக விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல் மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர். ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருக்கிறதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய, சிவனுக்கே பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிக்ஷை போட்டு அந்த பிக்ஷையை ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிக்ஷை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வருகிறான்.

மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன் பூரண வலுவோடும், பலத்தோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியான அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் போன்ற அனைவருக்கும் சூரை இடும் நாள் ஆகும். அதுவே மயானக்கொள்ளை என்றும் கூறப்படுகிறது. சூரை என்பது உணவு அளிப்பதையே இங்கே குறிக்கும். அப்போது உலகெங்கும் சுற்றி வந்த சிவன் அங்கே வந்து சேரும் தினம் மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசையாக இருக்கவே அன்று அங்காளியம்மன் சூரையின் முதல் கவளத்தை பிரம்ம கபாலத்தில் இட, பிரம்மஹத்திக்கு உணவு கிடைக்க அது சாப்பிடுகிறது. இரண்டாவது கவளமும் கபாலத்திலேயே அன்னை இடுகின்றாள். உணவின் ருசியில் தன்னை மறந்த பிரம்மஹத்தி அதையும் உண்ண, மூன்றாவது கவளத்தைச் சூரையாகச் சுடுகாட்டில் இறைக்கும்போது ஈசனைப் பற்றி இருந்த பிரம்ம ஹத்தி அந்தச் சூரையைச் சாப்பிட வேண்டி ஈசன் உடலில் இருந்து இறங்க, கையில் இருந்த கபாலத்தில் புகுந்து கொண்டு கீழே இறங்கியது. கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி, தாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார, என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.

பிரம்ம கபாலத்தினுள் புகுந்த பிரம்மாவின் பிரம்மஹத்தியானது சாப்பிட்டு முடிந்ததும் ஈசனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு விண்ணில் பறக்க ஆயத்தமானது. அங்காளி இதைக் கண்டு கோபம் கொண்டு அதற்கும் மேல் தானும் விஸ்வரூபம் எடுத்து பிரம்மாவின் கபாலத்தை பிரம்மஹத்தியோடு சேர்த்து அழுத்தித் தன் கால்களால் மிதித்தாள். அவள் கோபத்தைக் கண்டு மஹாவிஷ்ணு தலையை மிதித்த அங்காளியை அவ்வண்ணமே பூமிக்குள் தள்ளி மூடி மறைத்துவிட்டார். சற்று நேரத்தில் பூமிக்கு மேல் சுயம்புவாகப் புற்று உருவாகி அதில் ஒரு நாகமும் குடிகொண்டதாய்த் தலவரலாறு கூறுகிறது. இந்த நாகத்தின் படம் சுருங்காமலே பல யுகங்கள் இருந்ததாயும் கலி யுகத்திலே தேவர்கள் அனைவரும் தேர் உருவில் வந்து வணங்கவும் நாகத்தின் படம் சுருங்கி உள்ளே சென்று அங்காளம்மனாக அமர்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அங்காளம்மனை ஆதி பராசக்தி என்றே கூறுகின்றனர். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரத்தை அம்பிகை எடுத்ததாகவும் சக்தி உபாசகர்கள் கருத்து. இதைத் தான் முதல் சக்தி பீடம் எனவும் கூறுகின்றனர். சிருஷ்டியை அம்பிகை இங்கிருந்தே ஆரம்பித்ததாயும் ஐதீகம். கோயிலில் இருந்து சற்றுத் தூரத்தில் கர்ப்பிணிக் கோலத்தில் அம்பிகையைத் தரிசிக்கலாம் எனவும் கூறுகின்றனர். ஆனால் அங்கெல்லாம் போய்ப் பார்க்க முடியவில்லை. கோயிலின் நுழைவாயிலில் ஒரே கூட்டம். அங்கிருந்து நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப் பட்டோம். ஆனால் கோயிலின் சில ஊழியர்கள் தனியாகப் பணம் வாங்கிக்கொண்டு நேரே அழைத்துச் செல்கிறோம் என வற்புறுத்துவதையும் காண முடிந்தது. யாராயிருந்தாலும் உள்ளே போய்ப் புற்றுக்கருகே கூட்ட நெரிசலில் மாட்டிக்கொண்டே ஆகவேண்டும்.

இங்கே நாங்கள் நுழைவுச் சீட்டே வாங்கிக்கொண்டு, குழுவினர் அனைவரும் வரிசையில் நின்றோம். சிறிது தூரம் சம தரையில் சென்றதும் பின்னர் படிகள். மரப்படிகள். அதன் பின்னர் மேலே ஒரு பால்கனி போன்ற அமைப்பு, பின்னர் கூண்டு மாதிரியான இடத்தைக் கடந்து சென்றால் மேலே உயரமான பாலம். அதைக் கடக்கையில் கோயிலின் கீழே நடப்பதை நன்கு காண முடிந்தது. அவ்வாறு கண்டபோது முன் மண்டபத்தில் ஒரு அம்மன் சிலையை வைத்து அலங்கார, அபிஷேஹங்கள் செய்து வழிபாடுகள் நடத்தப் பட்டுக்கொண்டிருந்தன. இது கோயிலைச் சேர்ந்ததே இல்லை என்றனர். கோயில் பரம்பரையாகப் பூசாரிகள் வசம் இருப்பதாயும், அவர்களில் சிலர் இம்மாதிரித் தனியாக வழிபாடுகள், பிரார்த்தனைகளை நடத்தித் தருவதாயும் கூறினார்கள். இன்னும் சற்று முன் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் ஒரு பெரிய ஸ்ரீசக்கரம் போன்ற அமைப்புக் கல்லினால் செதுக்கப் பட்டிருந்தது. அதற்கு முன்னால் அங்கேயும் ஒரு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டு ஒரு பெண்மணி அதற்கு வழிபாடுகள் நடத்திக்கொண்டு கோயிலுக்கு வரும் பெண்களை எல்லாம் அங்கேயும் வந்து வழிபட்டாலேயே வழிபாடு பூர்த்தி அடையும் எனச் சொல்லிப் பணம் பிடுங்கிக்கொண்டிருந்தார். ஸ்ரீசக்கர அமைப்பில் படுக்கத் தனியாகச் சீட்டுப் பணம் செலுத்தி வாங்க வேண்டும். அதை வாங்கிக்கொண்டு சிலர் ஒவ்வொரு இடத்தில் தங்கள் தலையை வைத்துப் படுத்துக்கொண்டு இருந்தனர். அதைச் சுற்றி ஒரு கூண்டு.

அதற்குள் நாங்கள் கீழே இறங்கிச் சந்நிதியின் பின் பக்கம் இருந்த பெரிய புற்றினருகே வந்துவிட்டோம். இங்கே சில கோயில் ஊழியர்கள், (இந்தக் கோயிலில் கவனிக்கத் தக்கவை அனைத்து ஊழியர்களும், பெண்களே, அவர்களுக்கு உதவிக்கு மட்டும் ஆண்கள், கூட்டத்தைச் சமாளிக்க, எதையாவது எடுத்து வர என) புற்றின் மேல் போடப் பட்டிருந்த மஞ்சள் பொடிக்கும், மஞ்சள் கயிற்றுக்கும் பணம் வாங்கிக்கொண்டு பக்தர்களுக்குக் கொடுக்கும் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மக்களின் பக்தி அங்கே வியாபாரமாகிக்கொண்டிருந்தது. அதையும் வாங்கப் போட்டாபோட்டி. கயிற்றின் தரத்துக்கு ஏற்பப் பத்து ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய் வரை வசூலிக்கப் பட்டது. அங்கே நுழைவிடம் வேறே குறுகல். ஆகவே நெரிசலில் மாட்டிக்கொள்ள நேரிடுமே எனக் கவலை வந்தது. நல்லவேளையாக முன்னாலிருந்தவர்களில் சிலர் எங்கள் குழுவினர் என்பதால் கொஞ்சம் ஆறுதலாயும் இருந்தது. ஒரு மாதிரியாக உள்ளே போய் அம்பாளைத் தரிசித்தால், ஒரே தள்ளு! போங்கம்மா, போங்கப்பா, பார்த்தது போதும், போங்க, போங்க, அடுத்தவங்க பார்க்க வேண்டாமா?

அடக் கடவுளே, ஒரு விநாடி கூடப் பார்க்க முடியலையே? ஏமாற்றம் மனதில் சூழ்ந்தது. என்றாலும் அவசரம் அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக்கொண்டு அம்பிகை நீயாவது என்னைப் பார்த்துக்கோ அம்மானு சொல்லிட்டு அங்கிருந்து திருவண்ணாமலைக்குக் கிளம்பினோம்.

கோயில் பற்றி விசாரித்ததில் கிடைத்த மேலதிகத் தகவல்கள். மாசி மாதம் சிவராத்திரி அன்று லிங்கோத்பவம் எனக்கொண்டாடினாலும் இந்தக் கோயிலில் மட்டும் அன்றிரவு ஈசன் அம்மனின் சூரையை எதிர்நோக்கி வருகிறார். மறு நாள் அமாவாசையன்று இரவே அம்மன் மயானத்தில் உள்ள பூதங்கள், ஆவிகள், பேய், பிசாசுகள் அனைத்துக்கும் உணவளிப்பதாயும், அவ்வாறு அளிக்கும் உணவை வாரி இறைப்பதையே சூரை எனவும் கூறுகின்றனர். இதைப் பத்து நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர். அம்மன் வரலாற்றைக் கூறும் விழாவாக இங்கே மட்டுமே கொண்டாடப் படுவதாயும் கூறுகின்றனர்.

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில்

கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள நவக்கிரக சிலைகளில் ஒன்றாக சனீஸ்வர பகவான் பல கோவில்களில் இடம் பெற்றிருக்கிறார். சில கோவில்களில் சனீஸ்வர பகவான் துணைக் கோவில் கொண்டும் விளங்குகிறார். இந்த சனீஸ்வர பகவான் சுயம்புவாகத் தோன்றி தனக்கென ஒரு கோவில் கொண்டுள்ள இடம் குச்சனூர்.




தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலும் அமைந்திருக்கிறது. சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். தாங்கள் தொடங்கும் புதிய தொழில்கள் வளர்ச்சி அடையவும், வணிகங்கள் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் போன்ற வெளிநாட்டிலிருந்தும் பலர் இக்கோயிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.



தல வரலாறு

செண்பக நல்லூர் என்ற பகுதியைச் சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தைப்பேறின்றி மனம் வாடிவந்த நிலையில்,தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரித் தினமும் இறைவனிடம் வேண்டி வந்தான். இப்படி அவன் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்குப் பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும், அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர். சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான்.

இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளானான். மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

இவனது வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவர், "முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடிக்கிறது. அவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உன் தந்தையின் முற்பிறவி பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன." என்றார்.

சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

சனீஸ்வர பகவானும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏழரை நாழிகை காலத்திற்கு அவனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத்துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் "இந்த ஏழரை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்" என்று சொல்லி மறைந்தார். பின்பு அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்.

சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் தன்னுடைய வழிபாடு, சனி தோசம் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடு அந்த செண்பகநல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்தான். இதன்பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று ஆகிவிட்டது.

"தினகரன் மான்மியம்" என்கிற பெயரில் வெளியான பழமையான நூலில் இந்த தலத்திற்கான வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வழிபாடு


சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.

திருவிழாக்கள்


குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போது "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.

கோயில் சிறப்புகள்


1. சனீஸ்வர பகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள ஒரே தலம்.

2. முப்பெரும் தெய்வங்களான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் இந்த சுயம்பு சனீஸ்வர பகவானுக்குள் சேர்ந்து இருப்பதால் (ஐக்கியமாகி இருப்பதால்) மூலவருக்கு ஆறு கண்கள் இருக்கின்றன.

3. சனீஸ்வர பகவானுக்கு பிரம்மகதி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம்.

4. சனி தோசமுடையவர்கள் தங்கள் குறைகளை உணர்ந்து இங்கு வேண்டிக் கொண்டால் சனீஸ்வர பகவான் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பார்.

5. அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

6. இந்தியா தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் போன்ற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து வணங்கிச் செல்கின்றனர்.
அமைவிடம்


தேனி மாவட்டம் குச்சனூரிலிருக்கும் இக்கோவில் தேனி நகரிலிருந்து 23 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தேனியிலிருந்து குறிப்பிட்ட நேரங்களில் நகரப் பேருந்து வசதி இருக்கிறது. திருவிழாக்களின் போது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தினால் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.